வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பல வருடமாக உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை இப்படி கூட சூப்பரா சுத்தம் செய்யலாமா…!

Updated On: January 10, 2023 7:40 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

பாத்ரூம் உப்பு கறை நீங்க

வீட்டில் இருக்கும் மற்ற இடங்கள் மற்றும் பொருட்களை கூட எளிதில் சுத்தம் செய்து விடாமல். ஆனால் வீட்டில் இருக்கும் பாத்ரூமை சுத்தம் செய்வது என்பது மிகவும் கடினமான வேலை. அதிலும் உப்பு கறை படிந்த பாத்ரூமை சுத்தம் செய்வது என்பது அதற்கும் மேலாக தான் இருக்கும். நீங்களும் எத்தனை விதமான டிப்ஸ்களை பாத்ரூமிற்கு பயன்படுத்தி இருப்பீர்கள். ஆனால் அந்த டிப்ஸ்கள் அனைத்தும் உங்களுக்கு உதவியானதாக இருந்ததா என்று தெரியவில்லை. அதனால் உங்கள் வீட்டில் பலவருடமாக இருக்கும் உப்பு கறை படிந்த பாத்ரூமை 10 நிமிடத்தில் பளபளக்க செய்வதற்கான டிப்ஸ் பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Bathroom Salt Removal Tips:

உப்பு கறை படிந்த பாத்ரூம் டைல்ஸை முழுவதும் பளபளக்க செய்வதற்கு முதலில் ஒரு Liquid தயார் செய்ய வேண்டும். அதனை எப்படி தயார் செய்வது மற்றும் அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

  1. வினிகர்- 2 தேக்கரண்டி 
  2. கோலமாவு- 2 தேக்கரண்டி 
  3. ஹார்பிக்- 2 தேக்கரண்டி 

Bathroom Uppu Karai Poga Tips:

பாத்ரூம் டைல்ஸ் கிளீனிங்

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 2 தேக்கரண்டி கோலமாவு மற்றும் 2 தேக்கரண்டி வினிகர் சேர்த்து இரண்டையும் ஒரு ஸ்பூனால் சிறிது நேரம் கலந்து கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்த பிறகு கலந்து வைத்திருக்கும் பொருட்களுடன் 2 தேக்கரண்டி ஹார்பிக் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய உப்பு கறை படிந்த பாத்ரூமை சுத்தம் செய்வதற்கு பேஸ்ட் தயாராகிவிட்டது. (குறிப்பு: இதில் ஹார்பிக் பயன்படுத்தி இருப்பதால் உங்களுடைய கையினை இந்த பேஸ்ட்டில் பயன்படுத்த வேண்டாம்)

இப்போது நீங்கள் கையில் உறை அணிந்து கொண்டு பாத்ரூமில் சுவற்றில் உப்பு கறை உள்ள இடம் மற்றும் பாத்ரூம் டைல்ஸ் இந்த இரண்டு இடங்களில் தயார் செய்து வைத்துள்ள பேஸ்டை அப்ளை செய்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.

10 நிமிடம் கழித்த பிறகு பிரஸினால் நன்றாக தேய்த்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து விடுங்கள். அதன் பிறகு உங்களுடைய பாத்ரூமை பாருங்கள் உப்பு கறை அனைத்தும் நீங்கி புதிய பாத்ரூம் போல பளபளக்கும்.

இதையும் படியுங்கள்⇒ வீட்டை சுத்தம் செய்வதற்கு இந்த டிப்ஸ் மட்டும் ட்ரை பண்ணுங்க நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் ..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை