துணிகள் வெளுத்து போகாமல் இருப்பதற்கும், துணியில் இருக்கும் கறைகளை நீக்குவதற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

Clothes Maintenance Tips

இன்றைய பதிவில் துணிகள் வெளுத்து போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் ஆசைப்பட்டு ஒரு புதிய டிரஸ் வாங்குவோம். அது நாளடைவில் அந்த துணியில் உள்ள நிறம் மாறி துணி வெளுத்து போய்விடும். உடனே நாம் அதை வேண்டாம் என்று ஒதுக்கி விடுவோம். ஆனால் இனி அப்படி செய்ய தேவையில்லை. உங்கள் துணிகள் வெளுத்து போகாமல் இருப்பதற்கும், துணிகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Clothes Maintenance Tips in Tamil: 

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் இல்லத்தரசிகள் அனைவருமே துணிகளை பராமரிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். துணிகளை பராமரிப்பதற்கு கடைகளில் கிடைக்கும் பொருட்கள் தேவையில்லை. நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே துணிகள் வெளுத்து போகாமலும், துணிகளில் இருக்கும் கறைகளையும் நீக்க முடியும்.

வெள்ளை துணியில் கறைகளை நீக்க டிப்ஸ்: 

வெள்ளை துணியில் கறைகளை நீக்க

பெரும்பாலும் வெள்ளை நிற ஆடை அணியும் போது அதில் கட்டாயம் கறை ஏற்படும். அதுவும் சட்டை காலரில் இருக்கும் கறையை நீக்குவதற்கு நாம் பிரஷை பயன்படுத்துவோம். அதனால் சட்டை விரைவாகவே கிழிந்து விடும்.

அதனால்  வெள்ளை சட்டையில் கறை படிந்தால் அந்த இடத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஷாம்புவை போட்டு நன்றாக தேய்த்து விட்டு, பின் அந்த சட்டையை துணி பவுடர் கலந்த நீரில் 15 லிருந்து 30 நிமிடம் வரை ஊறவைத்து பிறகு அலச வேண்டும். இதுபோல செய்வதால் வெள்ளை சட்டையில் படிந்த எந்த கறையாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.  

அதுபோல  வெள்ளை சட்டையை துவைக்கும் போது சூடான தண்ணீரில் சிறிதளவு உப்பு கலந்து துவைத்தால் வெள்ளை துணி மங்காமல் பளபளப்பாக இருக்கும்.  

துணியில் உள்ள சாயத்தை நீக்குவதிலுருந்து வீட்டிற்கு தேவையான அட்டகாசமான குறிப்புகள்

துணியில் உள்ள எண்ணெய் கரையை நீக்க: 

துணியில் உள்ள எண்ணெய் கரையை நீக்க

உங்கள் துணியில் ஏதாவது எண்ணெய் கறை இருந்தால் அதை நீக்குவதற்கு கஷ்டப்பட தேவையில்லை. எண்ணெய் படிந்த இடத்தில் திருநீறை தடவி கொள்ளுங்கள். திருநீறு எண்ணெய் பசையை உறிஞ்சிவிடும். அதன் பிறகு நீங்கள் உங்கள் துணிகளை துவைத்தால் எண்ணெய் கறை முற்றிலுமாக நீங்கிவிடும்.

அதுபோல சாக்பீஸ் மற்றும் முகத்திற்கு தடவும் பவுடரை எண்ணெய் பசை படிந்த இடத்தில் தடவினால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.

துணிகள் வெளுத்து போகாமல் இருக்க:

துணிகள் வெளுத்து போகாமல் இருக்க

துணிகள் வெளுத்து போகாமல் இருப்பதற்கு துவைத்த துணிகளை அதிக நேரம் வெயிலில் போடக்கூடாது. அதுபோல துணிகளை காயவைக்கும் போது அந்த துணிகளின் உள் பக்கத்தை வெளியில் வைத்து காயவைக்க வேண்டும். அதாவது உள்பக்கம் வெளியில் தெரிவதுபோல காயவைக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 உங்கள் வீட்டிலில் மிதியடிகளை துவைக்க கஷ்டப்படுவீர்களா? அப்படினா அது உங்களுக்கான பதிவு தான்!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement