ஈ தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரு ஈ  கூட இருக்காது

ஈ தொல்லை நீங்க

பல இடங்களில் ஈக்கள் மொய்த்து கொண்டே இருக்கும். அதை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும். வீட்டில் எந்த உண்வு பொருட்களையும் வைக்க முடியாது. அதிலும் ஈக்கள் மொய்த்து கொண்டே இருக்கும். சாப்பிடும் போது கூட உணவுகளை திறந்து வைக்க முடியாது. அந்த அளவிற்கு ஈக்களின் அட்டகாசம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் ஈ மொய்த்த உணவுகளை சாப்பிட்டால்  உடலுக்கு தீங்கினை விளைவிக்கும். உங்கள் வீட்டிலும் இந்த மாதிரி ஈக்கள் அட்டகாசம் செய்கிறது என்றால் கவலையை விடுங்கள். இந்த பதிவில் ஈக்களை விரட்டுவதற்கு குறிப்புகளை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

புதினா:

ஈ தொல்லை நீங்க

புதினா இலைகளை தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும். இதை பயன்படுத்தி உங்கள் வீட்டில் எங்கெல்லாம் ஈ வருகிறதோ அங்கெல்லாம் தெளித்து விடவும். புதினா வாசத்திற்கு ஈக்கள் வராது.

எலுமிச்சை பழம் கிராம்பு: 

எலுமிச்சை மற்றும் கிராம்பு

ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ளவும். அதில் பாதி எலுமிச்சை பழத்தில் கிராம்புகளை சொருகி விடவும். இதை ஈக்கள் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு வைத்து விடவும்.

எலி தொல்லை இல்லாமல் இருக்க வீட்டில் இதை மட்டும் செய்தால் போதும்..! உடனே அதற்கான பலன் தெரியும்..!

துளசி:

ஈ தொல்லை நீங்க

துளசி இலைகளை தண்ணீர் அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ளவும். இதை பயன்படுத்தி உங்கள் வீட்டில் எங்கெல்லாம் ஈ வருகிறதோ அங்கெல்லாம் தெளித்து விடவும். துளசி வாசத்திற்கு ஈக்கள் வராது. துளசி செடியை வீட்டில் வளர்த்தாலும் ஈக்கள் வராது.

வினிகர்:

ஈ தொல்லை நீங்க

ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் சைடர்  வினிகர், துணி துவைக்க பயன்படுத்தும் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கவும். பாட்டில் மூடியில் ஈ நுழைகின்ற அளவிற்கு ஓட்டை போட்டு கொள்ளவும். இதனை ஈக்கள் அதிகமாக மொய்க்கின்ற இடத்தில் வைத்து விட்டால் ஈக்கள் எல்லாம் பாட்டிலில் விழுந்து விடும். 

கொசு தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரு கொசு கூட இருக்காது

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil