கொசு தொல்லை நீங்க
பெரும்பாலும் பார்க்கும் இடமெல்லாம் கொசுக்கள் அதிகமாக இருக்கிறது. எந்த சீசன்யிலும் கொசு இல்லாமல் பார்க்க முடியாது. எல்லா சீசனிலும் இதனுடைய அட்டகாசம் தாங்க முடியாது. இந்த கொசு கடிப்பதால் நம் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் இரவிலும் தூங்க முடியாமல் காதில் ஒய் என்ற சத்தத்துடன் எழுப்பும். அதனால் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கொசுக்களை எப்படி அழிப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து கொசுக்களை எப்படி அழிப்பது:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
எலுமிச்சை மற்றும் கிராம்பு:
இந்த குறிப்பை நீங்கள் உங்களது ரூம் அல்லது சிறிய அறையில் வைத்தால் ஒரு கொசு கூட இருக்காது. அதற்கு ஒரு எலுமிச்சையை பாதியாக கட் செய்து, அதில் ஒரு 5 கிராம்புகளை எலுமிச்சையின் நடுவில் சொருகி விடவும். இதை வைத்தீர்கள் என்றால் கொசுவே இருக்காது.
பூண்டு:
ஒரு 30 பற்கள் பூண்டை தோல் உரித்து மசித்து கொள்ளவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இந்த Liquid-யை வீட்டில் எங்கெல்லாம் கொசுக்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் இந்த liquid-யை தெளிக்கவும்.
யூகலிப்டஸ் இலை:
யூகலிப்டஸ் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். இந்த தண்ணீர் ஆறியதும் அதில் தலை தேய்க்க பயன்படுத்தும் ஷாம்பை சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த LIQUID-யை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி வீட்டில் எங்கெல்லாம் கொசுக்கள் இருக்கிறதோ அங்கெல்லாம் தெளித்து விட்டால் கொசுக்கள் நீங்கி விடும்.
எலி தொல்லை இல்லாமல் இருக்க வீட்டில் இதை மட்டும் செய்தால் போதும்..! உடனே அதற்கான பலன் தெரியும்..!
முக்கியமாக கொசுக்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:
முக்கியமாக வீட்டில் உள்ள கொசுக்கள் வராமல் இருப்பதற்கு குப்பைகளை சேர்த்து வைக்காமல் இருக்க வேண்டும். தரையில் தண்ணீர் ஏதும் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி தேவையில்லாமல் செடிகள் இருந்தால் அதனை அகற்றி விடவும். வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் கொசுக்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. மேலும் உணவுகளை மூடி போட்ட பாத்திரத்தில்வைத்து மூடி வைக்க வேண்டும்.
என்னா சொல்றீங்க இதுமாதிரி வீட்டை சுத்தம் செய்தால் வெறும் 5 நிமிடம் போதுமா..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |