உங்கள் வீட்டில் ஈ தொல்லை அதிகமாக இருக்கிறதா.! அப்போ இதை ட்ரை பண்ணுங்க ஒரு ஈ கூட வராது

ஈ தொல்லை நீங்க

அனைத்து வீடுகளிலும் ஈ, கொசு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அதுவும் சமைலறையில் ஈ எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். வீட்டில் ஒரு உணவையும் வைக்க முடியாது, சாப்பிட முடியாது எல்லா உணவு பொருட்களிலும் ஈ வந்துவிடும். நூற்றுக்கணக்கான பல்வேறு வகையான பாக்ட்ரியாக்களை ஈக்கள்  உணவு பொருட்களில் மீது செலுத்துகின்றன. இப்படி ஈக்கள் மொய்த்த உணவுகளை சாப்பிடும் போது நமது உடல் ஆரோக்கியத்தில் தீங்கினை விளைவிக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதற்கு ஈக்களை விரட்ட வேண்டும். நீங்கள் ஈக்களை விரட்டுவதற்கு பல முறைகளை கையாண்டுருப்பீர்கள். எதுவும் பலன் கொடுக்கவில்லை என்று கவலை படுவீர்கள். ஆனால் இந்த பதிவில் கூறியிருப்பது போல் செய்தால் ஒரு ஈ கூட வராது.

ஈ தொல்லை போக வழி:

இதையும் படியுங்கள்⇒  4 சொட்டு போதும் ஈ தொல்லை இனி வீட்டில் இருக்காது..! ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்..!

குறிப்பு:1

ஈ தொல்லை போக வழி

முதலில் ஒரு தேவையில்லாத வாட்டர் பாட்டிலை எடுத்து கொள்ளுங்கள். அதில் மூடி இருக்கும் கீழ் பகுதியை கட் செய்து கொள்ளுங்கள். நறுக்கிய கீழ் பகுதியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் 1/2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து விடுங்கள். சர்க்கரை கரைந்த பிறகு 2  வாழைப்பழ துண்டுகளை சேர்த்து கொள்ளுங்கள்.

ஈ தொல்லை போக வழி

இந்த பொருட்கள் எல்லாம் சேர்த்து பிறகு பாட்டிலின் மேலே ஒரு கவரை வைத்து கட்டி கொள்ளுங்கள். கவருக்கு மேலே சின்ன சின்னதாக ஓட்டை போட்டு கொள்ளுங்கள். இப்போது இந்த பாட்டிலை ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் வைத்து விட்டால் ஈக்கள் எல்லாம் அந்த பாட்டிலின் உள்ளே சென்று விடும்.

குறிப்பு:2

 ஈ தொல்லை போக வழி

அடுத்து தேவையில்லாத கண்ணாடி பாட்டில் இருந்தால் எடுத்து கொள்ளுங்கள். அதில் 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு தேன் ஊற்றி கொள்ளுங்கள். அதனுடன் 2 வாழைப்பழ துண்டுகளையும் சேர்த்து கொள்ளுங்கள்.

 ஈ தொல்லை போக வழி

இந்த பாட்டிலின் மீது கடையில் சீனி வாங்கும் போது சுருள் போட்டு கொடுப்பார்கள் அல்லவா.! அது போல் பேப்பரில் சுருள் செய்து அதன் அடிப்பகுதியை ஓட்டை தெரிகின்ற அளவிற்கு செய்து அந்த பாட்டிலின் உள்ளே வைத்து விடுங்கள். அந்த பாட்டிலின் வாயில் டேப்பை பயன்படுத்தி சுத்தி ஒட்டி விடுங்கள்.  இப்பொழுது இந்த பாட்டிலை உங்கள் வீட்டில் ஈக்கள் எங்கு அதிகமாக இருக்கிறதோ அங்கு வைத்து விடுங்கள்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகளில் கூறியது போல் வாழைப்பழம் தான் சேர்க்க வேண்டும் என்பதல்ல எலுமிச்சை பழ தோல் இருந்தால் கூட சேர்த்து கொள்ளலாம். இந்த குறிப்பை ட்ரை பண்ணி பாருங்க. இந்த குறிப்புகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சேர் செய்யுங்கள். அடுத்து இது போல் ஒரு பயனுள்ள குறிப்பில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்🙏.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil