மனச்சோர்வு நீங்க – How to Avoid Sadness in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. இந்த உலகில் வாழ்கின்ற அனைவருக்குமே ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து கவலை அடைந்துகொண்டுதான் இருக்கின்றன. யாருக்குத்தான் இல்லை கவலை. சிலர் எந்த விஷயமாக இருந்தாலும் ஜகதமாக் எடுத்துக்கொள்வார்கள், அதனை எதிர்கொள்ளவும் நினைப்பவர்கள். சில ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி அதனை மனதில் வைத்துக்கொண்டு அதனை நினைத்து அதிகளவு கவலைப்படுவார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள் நன்றி வணக்கம்.
மனவலிமை பெறுவது எப்படி?
இந்த வாழ்கை என்பது நிரந்தரம் அற்றது, நாம் இந்த வாழ்க்கையில் நாம் வாழப்போவது என்பது குறைந்த காலம் மட்டுமே. ஆகவே நாம் தேவையில்லாத விஷயங்களை மனதில் நினைத்து கவலைப்பட வேண்டாம்.
எதையெல்லாம் நமக்கு தேவை என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் நம் கூட வரப்போவது கிடையாது. ஆகவே நமது ஆசைகளை குறைத்தாலே நமக்கு முழுமையான மன நிம்மதிக்கிடைக்கும்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையில் நேற்று மகிழ்ச்சியாக இருந்திருப்போம், இன்று அதற்கு எதிராக பல பிரச்சனைகளை சந்தித்து இருப்போம், மீண்டும் நாளை கண்டிப்பாக நமக்கு சந்தோசம் என்பது கிடைக்க கூடும். எப்படியே நமது வாழ்க்கை நகர்ந்து கொண்டே போகும். ஆகவே எந்த ஒரு விஷயத்தை நினைத்து மனம் வேதனை அடைய வேண்டாம். எல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
நமக்கு இருக்கின்ற கஷ்டங்களை நிச்சயமாக கடவு அறிந்திருப்பார்கள், இருப்பினும் இந்த கஷ்டங்கள் நீங்கள் கொஞ்சம் காலங்கள் ஆகும். ஆகவே அதுவரை பொறுமையாக இருங்கள்.
இந்த உலகில் நிலையாக இருப்பது மற்றும் இருக்க போவது கடவுள் மட்டும் தான் ஆகவே தினமும் இறைவனை வணங்குங்கள் கண்டிப்பாக உங்களது கஷ்டங்கள் அனைத்தும் ஒருநாள் மறையும்.
கடவுள்கிட்ட எப்பொழுதுமே ஏன் எனக்கு மட்டும் நிறைய கஷ்டங்களை கொடுக்குற என்று சொல்லாதீங்க. அப்படி சொன்னிங்கன்னா கண்டிப்பா உங்களுக்கு கஷ்டங்கள் மட்டும் தான் அதிகமாக இருக்கும். ஆகவே என்ன கஷ்டங்களாக இருந்தாலும் சரி நீங்கள் கடவுள்கிட்ட வேண்டும் போது கடவுளே நான் நன்றாக இருக்கிறேன். எல்லாருமே நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுங்கள். கண்டிப்பாக எல்லாரும் நல்ல இருப்போம்.
நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்குமே கஷ்டங்கள், கவலைகள், பிரச்சனைகள் என்று இருக்க தான் செய்கிறது ஆகவே அவர்களை பார்த்து உங்கள் மனதை வலிமையாக மாற்றி கொள்ளுங்கள்.
நிம்மதி என்பது பணத்தால் கிடைப்பது இல்லை. நாம் மனத்தால் கிடைப்பது ஆகும். அதனால பணம் வைத்திருப்பவர்கள் இந்த உலகில் ரொம்ப சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.
நமது கஷ்டங்களை இறைவன் இந்த நேரம் கேட்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் நம்மை விட அதிக கஷ்டத்தை அனுபவிப்பவர்களை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று அர்த்தமாகும். ஆக அடுத்து நமக்கும் வருவார் நமது துன்பங்களை தீர்ப்பார் என்று நம்பிக்கை வையுங்கள்.
இப்போது நீங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் நிரந்தரமானது இல்லை, நாளை இதே நேரம் இதே நொடி நீங்கள் வேறொரு மனநிலையில் இருப்பீர்கள். அதற்கு ஏன் கவலைப்பட வேண்டும் சொல்லுங்கள்.
இருக்கின்ற ஒரு Life-ஐ சோகமாக அமைத்துக்கொள்வதும், மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்வதும் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |