கேஸ் பர்னர் சுத்தம் செய்வது எப்படி? | How to Clean Gas Burner in Tamil
பொதுநலம்.காம் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.. நமது வலைதளத்தில் தினமும் பலவகையான சமையலறை டிப்ஸை பற்றி பதிவு செய்து வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் கேஸ் பர்னரை மிக எளிதாக சுத்தம் செய்யும் முறையை பற்றி தான் பார்க்க போகிறோம். இதுவரை கஷ்டப்பட்டு தேய்த்து சுத்தம் செய்த கேஸ் பர்னரை நீங்கள் இனி மிக சுலபமாக 1 ஒரே ஒரு பொருளை வைத்து சுத்தம் செய்யலாம். சரி வாங்க அது என்ன பொருள்? எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருள்:
- புளி – தேவையான அளவு
- தண்ணீர் – ஒரு கப்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சீலிங் பேன் வேகம் குறைவாக உள்ளதா.! அப்போ இப்படி பண்ணுங்க ஸ்பீடு அள்ளும்..
கேஸ் பர்னர் சுத்தம் செய்வது எப்படி? – How to Clean Gas Burner at Home in Tamil
25 கிராம் அளவு சமையல் புளியை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை ஒரு பவுலில் போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு ஓரளவு புளியை கரைத்துக்கொள்ளுங்கள்.
பின் கேஸ் பர்னரை அவற்றில் போட்டு இரவு முழுவதும் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
பிறகு மறுநாள் ஊறவைத்த கேஸ் பர்னரை எடுத்து பாத்திரம் துலக்கும் கம்பியால் தேய்த்து கழுவினால் கருப்பாக இருந்த கேஸ் பர்னர் புதுசு போல் தகதகன்னு மின்னும்.
இவ்வாறு தேய்த்து கழுவிய பிறகு குச்சி அல்லது கம்பியை பயன்படுத்தி கேஸ் பர்னரில் உள்ள ஓட்டைகளை சுத்தம் செய்தால் போதும் கேஸ் அடுப்பும் மிக வேகமாக எரியும் கண்டிப்பாக உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள். அதுக்கப்பறம் இந்த டிப்ஸை மட்டும் தான் கேஸ் பர்னர் சுத்தம் செய்ய பயன்படுத்துவீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பைக்கில் செல்லும் போது நாய் துரத்தினால் நாயிடம் இருந்து தப்பிக்க என்ன செய்யனும்னு தெரியுமா..?
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |