How to Clean Oily Vessels at Home in Tamil
பொதுவாக நாம் அனைவரின் வீட்டிலேயும் எண்ணெய் பாத்திரங்கள் இருக்கும். அதில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்புகளை போக்கி நன்கு சுத்தம் செய்வதற்கு நீங்களும் உங்களின் கைகளை பயன்படுத்தி கஷ்டப்பட்டு கடுமையாக தேய்க்க வேண்டும். ஆனால் இனிமேல் உங்களுக்கு அந்த கஷ்டம் தேவையில்லை. ஏனென்றால் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் வகையில் எண்ணெய் பிசுபிசுப்பு கொண்டுள்ள பாத்திரங்களை கை வைக்காமல் எளிமையான முறையில் எவ்வாறு சுத்தம் செய்வது என்பதற்கான குறிப்பினை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம்.
அதிலும் குறிப்பாக உங்களின் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள குறிப்பினை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Clean Oily Vessels in Tamil:
எண்ணெய் பிசுபிசுப்பு கொண்டுள்ள பாத்திரங்களை கை வைக்காமல் எளிமையான முறையில் எவ்வாறு சுத்தம் செய்வது என்பதற்கான குறிப்பினை பற்றி தான் விரிவாக காணலாம். முதலில் அதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்
- பாத்திரம் கழுவும் லிக்விட்- 2 டேபிள் ஸ்பூன்
- வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:
முதலில் அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து அதில் நாம் சுத்தம் செய்ய போகின்ற எண்ணெய் பிசுபிசுப்பு கொண்டுள்ள பாத்திரங்கள் அனைத்தும் மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நாம் சுத்தம் செய்ய போகும் எண்ணெய் பாத்திரங்கள் போட்டு கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> என்னது வீட்டில் உள்ள செப்பு பாத்திரங்களை கை வைத்து தேய்க்காமல் சுத்தம் செய்யலாமா
எலுமிச்சை சாற்றினை ஊற்றி கொள்ளவும்:
பின்னர் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பாத்திரம் கழுவும் லிக்விடை கலக்கவும்:
அதே போல் அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் பாத்திரம் கழுவும் லிக்விடை சேர்த்து நன்கு கலக்கவும்.
வினிகரை சேர்த்து கொள்ளவும்:
இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் வினிகரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி 1/2 மணி நேரம் அப்படியே ஊற விடுங்கள். பின்னர் பாத்திரத்தை எடுத்து லேசாக தேய்த்து தூய்மையான தண்ணீரை ஊற்றி நன்கு கழுவி கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்களின் எண்ணெய் பிசுபிசுப்பு கொண்டுள்ள பாத்திரங்கள் அனைத்தும் நன்கு சுத்தமாக மாறியிருப்பதை நீங்களே காணலாம்.
இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டு பூஜை பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்வதற்கு இதை ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |