உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் குழாய்களில் படிந்துள்ள கறைகளை எளிதில் போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

How to Clean Water Tap in Tamil

How to Clean Water Tap in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவரின் இல்லங்களிலும் தண்ணீரை எளிமையாக நமக்கு கிடைக்கும் வகையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனை திறந்தால் மட்டும் போதும் நமக்கு தேவையான தண்ணீர் கிடைத்துவிடும். அப்படி நமது தண்ணீர் பிரச்சனைகளை போக்க உதவும் தண்ணீர் குழாய்களில் படிந்துள்ள கறைகளை எவ்வாறு போக்குவது என்பதற்கான சில டிப்ஸ்களை பற்றி இன்றைய பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன டிப்ஸ் என்று அறிந்துகொண்டு நீங்களும் அந்த டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் குழாய்களில் படிந்துள்ள அனைத்து கறைகளை போக்கிக் கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே அது என்ன டிப்ஸ் என்று விரிவாக இந்த பதிவில் காணலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Clean Tap in Tamil:

How to Clean Tap in Tamil

தண்ணீர் குழாய்களில் படிந்துள்ள கறைகளை போக்க உதவும் சில டிப்ஸ்களை பற்றி பார்க்கலாம். முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. Lemon salt powder- 2 டேபிள் ஸ்பூன் 
  2. பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன் 
  3. உப்பு – 1 டேபிள் ஸ்பூன் 
  4. வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் 

மேலே கூறியுள்ள பொருட்களை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்கள் வீட்டு தண்ணீர் குழாய்களின் மீது தடவி 10 – 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=>உங்கள் வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள அனைத்து கறைகளை போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

அதற்கு பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளுங்கள். இப்பொழுது உங்களின் தண்ணீர் குழாயில் படிந்துள்ள அனைத்து கறைகளும் நீங்கி இருப்பதை நீங்களே பார்க்கலாம்.

How to Clean Taps Home Remedies in Tamil:

How to Clean Taps Home Remedies in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. எலுமிச்சை பழம் – 2
  2. பேக்கிங் சோடா – 2 டேபிள் ஸ்பூன் 
  3. வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்

முதலில் நாம் எடுத்துவைத்துள்ள 2 எலுமிச்சை பழங்களையும் இரண்டாக நறுக்கி அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு சாற்றினை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க..!

அதனுடனே 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 டேபிள் ஸ்பூன் வினிகர் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளுங்கள். பிறகு அதனை உங்கள் வீட்டு தண்ணீர் குழாய்களின் மீது தடவி 10 – 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள்.

அதற்கு பிறகு தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளுங்கள். இப்பொழுது உங்களின் தண்ணீர் குழாயில் படிந்துள்ள அனைத்து கறைகளும் நீங்கி இருப்பதை நீங்களே காணலாம்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil