உங்கள் வீட்டு பாத்ரூம் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டுமா..? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

Advertisement

How to Keep Bathroom Fresh and Clean in Tamil

பொதுவாக ஒரு வீட்டில் மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய இடம் எது என்றால் அது நமது வீட்டில் உள்ள கழிவறை தான். அப்படி சுத்தமாக மட்டும் வைத்திருந்தால் போதாது அங்கு எந்த வித துர்நாற்றம் வராமல் பார்த்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எளிமையான முறையில் உங்கள் வீட்டு பாத்ரூம் நன்கு சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்திருக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Keep Bathroom Smelling Fresh Naturally in Tamil:

How to Keep Bathroom Smelling Fresh Naturally in Tamil

உங்கள் வீட்டு பாத்ரூம் நன்கு சுத்தமாகவும், வாசனையாகவும் வைத்திருக்க உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்டுத்தி எளிமையான முறையில் எவ்வாறு வீட்டு பாத்ரூமை சுத்தம் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

அதற்கு முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. எலுமிச்சை பழத்தோல் – 8
  2. பேக்கிங் சோடா – 1 டேபிள் ஸ்பூன் 
  3. வினிகர் – 2 டேபிள் ஸ்பூன் 
  4. உப்பு – 1 டேபிள் ஸ்பூன் 
  5. சலவைத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  6. தண்ணீர் – 1/2 கப்  

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 8 எலுமிச்சை பழத்தோல்களையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் 1/2 கப் தண்ணீரையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டி கொள்ளவும். அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, 2 டேபிள் ஸ்பூன் வினிகர், 1 டேபிள் ஸ்பூன் உப்பு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உங்கள் பாத்ரூமில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்கள் கழித்து  தேய்த்து கழுவினீர்கள் என்றால் உங்கள் வீட்டு பாத்ரூம் எப்பொழுதும் சுத்தமாகவும் மற்றும் நறுமணத்துடனும் இருக்கும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உங்கள் வீட்டு பாத்ரூம் கதவுகளில் உள்ள அனைத்து கறைகளை போக்க இந்த டிப்ஸ் மட்டும் போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement