ஜீன்ஸ் பேண்ட் எப்படி துவைக்க வேண்டும்
நண்பர்களே வணக்கம் இன்றைய பயனுள்ள தகவலில் ஜீன்ஸ் பேண்ட் எப்படி துவைப்பது என்பதை தான் இந்த பதின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க..! பொதுவாக புத்தாடை வாங்குவதில் ஆண் பெண் இருபாலருக்கும் மகிழ்ச்சி தான். துணி வாங்குவதில் இருக்கும் ஆசை அதனை பத்திரமாக வைத்துக்கொள்வதில் இருக்கவேண்டும் அல்லாவா? சிலருக்கு அதனை வாங்குவதில் இருக்கும் ஆர்வம் அது புதுசாக இருக்கவேண்டும் என்பதில் இருக்கும். ஆனால் சில தவறுகளால் பேண்ட் வீணாகி கலர் மங்கிவிடுகிறது.
Jeans Pant Use Tips in Tamil:
முதலில் ஜீன்ஸ் ஆடை அதிக காசுக்கும் தான் விற்கும் ஆனால் அதன் மீது உள்ள ஆசையில் அதனை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவோம். அதனை ஒரு முறை போட்டவுடன் அல்லது சாதாரணமாக போட்டு பார்த்த பின் அதனை துவைக்க எடுத்து செல்வீர்கள் ஆனால் அப்படி செய்வது மிகவும் தவறு.
நீங்கள் முழு நேரம் 3 அல்லது 4 நாட்கள் போட்டுக்கொண்டீர்கள் என்றால் அப்போது மட்டுமே துணிகளை துவைக்க வேண்டும்.
நீங்கள் அதனால் 10 அல்லது 20 நாட்கள் துவைக்கலாம் போடக்கூடாது. ஏனென்றால் துணிகளில் நம் உடலிருந்து வரும் வியர்வை அந்த ஜீன்ஸ் ஆடையில் தங்கி உடலில் ஊர்ந்து தேவையில்லதா சர்ம பிரச்சனையை ஏற்படுத்தும்.
நாம் துணியை துவைக்கும் போது துணியின் தரமும் நிறமும் மாறாமல் இருக்கவேண்டும். அதனை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நிறம் தரமாக இருக்க சில டிப்ஸ் பார்ப்போம் வாங்க..!
டிப்ஸ்: 1
ஜீன்ஸ் ஆடையை துவைக்க ஒரு வாளியில் தனியாக தண்ணீர் ஊற்றவும் அதன் பின் அதில் வினிகர் சேர்த்து 1/2 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு நீங்கள் எப்போதும் போல் துணிகளை துவைக்கலாம். இதனால் துணியின் நிறம் மாறாது.
டிப்ஸ்: 2
உங்களிடம் வினிகர் இல்லையென்றால் வாளியில் தண்ணீர் ஒரே ஓஒரு அதில் கல் உப்பு கலந்து அதில் ஜீன்ஸ் ஆடையை ஊறவைத்து துவைக்கலாம்.
டிப்ஸ்: 3
சிலர் துணிகளை துவைக்கும் போது வெண்ணீர் ஊற்றி அதில் துணிகளை ஊறவைத்து துவைப்பதால் அழுக்குகள் உடனே போய்விடும் அதனால் அப்படி செய்வார்கள் ஆனால் அது தவறு. வேறு எந்த ஆடைகளுக்கு வேண்டுமாலும் செய்யலாம் ஆனால் ஜீன்ஸ் ஆடைக்கு அது சரி வராது. மற்ற ஆடைகளுடன் சேர்த்து ஜீன்ஸ் ஆடையை துவைக்க கூடாது, தனியாகத்தான் ஊற வைத்து துவைக்க வேண்டும்.
டிப்ஸ்: 4
ஜீன்ஸ் ஊறவைக்கும் போது உள் புறம் திருப்பிப்போட்டு ஊறவைக்க வேண்டும். அப்போது தான் ஆடையின் நிறம் மாறாமல் இருக்கும். அதேபோல் உடலில் உள்ள வியர்வை உள் புறம் தான் அதிகம் சார்ந்து இருக்கும். அதுவும் போய்விடும்.
டிப்ஸ்: 5
பொதுவாக ஜீன்ஸ் ஊறவைக்கும் போது எப்படி உள்ளதோ அதேபோல் அப்படியே ஊறவைத்து துவைப்போம் ஆனால் அப்படி செய்யவே கூடாது துவைக்கும் போது பட்டன், ஜிப் ஆகியவற்றை போட்டு தான் துவைக்க வேண்டும். அப்போது தான் நீண்ட நாட்கள் வரை அப்படியே இருக்கும்.
டிப்ஸ்: 6
துணிகளை துவைப்பதை விட காய வைப்பதில் தான் தவறு செய்வீர்கள், வெயிலில் போட்டு விடுவீர்கள். அப்போது தான் ஜீன்ஸ் ஆடை சீக்கிரம் காய்ந்து விடும் என்று சிலர் போடுவார்கள். ஆனால் அதுவும் சரி தான் காயவைக்கும் போது உள்புறம் வெயிலில் படும்படி போட வேண்டும். அப்போது தான் நிறமும் மாறாது, வியர்வை கிருமியும் போய்விடும்.
உங்கள் துணிகளின் நிறம் மாறாமல் புதிய ஆடை போலவே இருக்க இதை செய்யுங்கள்.!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |