கார்த்திகை தீபம் அன்று விளக்கு காற்றில் அணைந்து போகாமல் இருக்க டிப்ஸ்..!

Advertisement

விளக்கு காற்றில் அணைந்து போகாமல் இருக்க டிப்ஸ் | Karthigai Deepam Tips in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. வரும் டிசம்பர் 6-ஆம் தேதி அன்று பெரிய கார்த்திகை வரவிருக்கிறது. இருப்பினும் 5-ஆம் தேதியில் இருந்தே பலர் வாசலில் விளக்கேற்ற ஆரம்பித்துவிடுவார்கள். அப்படி வாசலில் விளக்கேற்றும்போது அந்த விளக்கு காற்றில் அணையாமல் இருக்க ஒரு அருமையான டிப்ஸை இந்த பதிவின் இறுதியில் நாம் பார்க்கலாம். சரி வாங்க கார்த்திகை தீபம் அன்று நீங்கள் எளிமையாக விளக்கேற்றிட சில டிப்ஸ் பற்றி இங்கு நாம் பார்க்கலாம்.

டிப்ஸ்: 1

கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முதல் நாள் அகல் விளக்குகளை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடான நீரை ஊற்றி சிறிதளவு விம் ஜெல் அல்லது சோப்பு தூள் போட்டு கலந்துவிடுங்கள். பிறகு அதனை ஒரு மணி நேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். பிறகு வெயிலில் கைவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

விளக்கில் தண்ணீர் இருந்தால் அதன்பிறகு விளக்கு அதிகமாக எண்ணெய் குடிக்கும்.

டிப்ஸ்: 2 

பிறகு விளக்கை சுத்தமாக துடைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.

டிப்ஸ்: 3

விளக்கேற்றுவதற்கு 10 நிமிடத்திற்கு முன் தேவையான அளவு திரிநூல்களை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் அதனை ஒரு பாக்சில் போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி திரிநூலை ஊறவைக்கவும். இப்படி செய்வதினால் எண்ணெய் திரிநூலில் நன்றாக ஊறி இருக்கும். விளக்கேற்றுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும்.

டிப்ஸ்: 4

அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றும் போது விளக்கு முழுவது ஊற்ற கூடாது 3/4 அளவு மட்டும் எண்ணெய் ஊற்றுங்கள். ஏனென்றால் 3/4 அளவு எண்ணெய் ஊற்றும் போது விளக்கில் இருந்து எண்ணெய் வழியாமல் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கார்த்திகை தீபத்திற்கு தண்ணீரில் இந்த ட்ரிக் ட்ரை செய்து விளக்கு ஏற்றுங்கள்..!

டிப்ஸ்: 5

விளக்கில் போடும் திரி உடனே பற்றி எரிய திரியில் கொஞ்சம் சூடத்தை நுனிக்கி தடவி விட்டால் திரிநூல் உடனே பற்றிக்கொள்ளும்.

டிப்ஸ்: 6

வாசலில் ஏற்றும் விளக்கு அணையாமல் இருக்க வேஷ்டான தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதனை மேல் காட்டியுள்ளது போல் கட் செய்து கொள்ளுங்கள்.

பிறகு அகல் விளக்குகளை ஏற்றி நறுக்கிய பிளாஸ்ட்டிக் பாட்டில்களை மேல் பட்டதில் காட்டியுள்ளது போல் வைத்தீர்கள் என்றால் காற்றில் விளக்குகள் அவ்வளவு சுலபமாக அணைந்துவிடாது.

இந்த டிப்ஸினை பணப்படுத்தி வரும் கார்த்திகை திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள் நன்றி வணக்கம்..

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
பூஜை அறை குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement