Toilet Cleaner இல்லாமல் டாய்லெட் சுத்தம் செய்யும் முறை
வணக்கம் மக்களே.. இன்று நாம் வீட்டிற்கு தேவைப்படும் ஒரு அருமையான டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். அதவாது அனைவரது வீட்டிலும் கண்டிப்பாக டாய்லெட் என்பது அவசியம் இருக்கும். நாம் இந்த டாய்லெட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள தான் விரும்புவோம். ஆனால் நாளாக நாளாக அவற்றில் கறை படித்து பார்ப்பதற்கு சுத்தம் செய்யாதது போல் இருக்கும். குறிப்பாக உப்பு தண்ணீராக இருந்தால் உப்பு கறையும் நன்றாக படிந்துகொள்ளும். இதற்காக Toilet Cleaner வாங்கி பயன்படுத்துவோம். இருப்பினும் இந்த Toilet Cleaner இல்லாமலும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக சுலபமாக சுத்தம் செய்ய முடியும். சரி வாங்க அது எப்படி என்பதை இப்பற்றி இப்பொழுது பார்க்கலாம்;
Toilet Cleaning Tips in Tamil: 1
தேவையான பொருள்:
- பல் துலக்கும் பேஸ்ட் ஏதாவது ஒன்று
சுத்தம் செய்யும் முறை:
பல் துலக்கும் பேஸ்ட் ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை அதிக கறைபடிந்த டாய்லெட்டில் நன்றாக அப்ளை செய்து பிரஷை பயன்படுத்தி லேசாக கரை உள்ள இடத்தில் தேய்த்து விடுங்கள்.
பிறகு ஒரு மணி நேரம் நன்றாக ஊறவிடவும். ஒரு மணி நேரம் கழித்து மீண்டு டாய்லெட் சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஷை பயன்படுத்து 10 முதல் 15 நிமிடம் தேய்த்தால் போதும். டாய்லெட்டில் படிந்திருக்கும் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இதை ட்ரை பண்ணுங்க இவ்ளோ நாள் டாய்லெட் கஷ்டப்பட்டு கிளீன் பண்ணோம்னு யோசிப்பாங்க..!
Toilet Cleaning Tips in Tamil: 2
தேவையான பொருள்:
- பேக்கிங் சோடா
சுத்தம் செய்யும் முறை:
பாத்ரூமில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறைகளை அகற்ற பேக்கிங் சோடா மிகவும் பயன்படுகிறது. இந்த பேக்கிங் சோடாவை மட்டும் பயன்படுத்தி டாய்லெட்டில் உள்ள கறைகளை மிக எளிதாக நீக்கிவிடலாம்.
இதற்கு நீங்கள் உங்கள் டாய்லெட் சுத்தம் செய்வதற்க்கான தேவையான அளவிற்கு பேக்கிங் சோடா எடுத்துக்கொள்ளுங்கள். அதனை கறைகள் உள்ள இடத்தில் நன்றாக தூவி பிரஷை பயன்படுத்தி நன்றாக தேய்ந்து விடுங்கள். பிறகு 1/2 மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள்.
பிறகு 1/2 மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு 5 முதல் 10 நிமிடம் பாத்ரூம் டாய்லெட்டை தேய்த்துவிடுங்கள்.
பின் சுத்தமாக கழிவினால் அவற்றில் இருக்கும் கறைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
மேல் கூறப்பட்டுள்ள இரண்டு டிப்ஸில் எதாவது இன்றை ட்ரை செய்தாலே போதும் பாத்ரூம் மற்றும் டாய்லெட்டில் உள்ள கறைகள் முழுவதும் நீங்கிவிடும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |