சமைக்க தெரிந்தவர்களுக்கு இது தெரியாமல் இருந்தால் எப்படி.! சமைக்க தெரியும் என்று சொல்வதில் அர்த்தமில்லை..

useful kitchen tips in tamil

சமையல் குறிப்புகள்

சில நபர்கள் சமையலில் கில்லாடியாக இருப்பார்கள். எந்த உணவாக இருந்தாலும் சரி அதை அசால்ட்டா சமைத்திடுவார்கள். இன்னும் சில நபர்கள் எத்தனை நபருக்கும் வேண்டுமானாலும் சமைப்பார்கள். இப்படி சமையலில் புலியாக இருப்பவர்களிடம் உணவில் உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும் கேட்டால் அவர்களுக்கு சரி செய்ய தெரியாது. அதனால் சமைப்பது முக்கியமில்லை. உணவில் ருசியை அதிகரிக்க, உணவு கெட்டு போகாமல் இருக்க இன்னும் சில உணவு தந்திரங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமானது. அதனால் உங்களுக்கு உதவும் வகையில் சமையலறை குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

இட்லி கெட்டு போகாமல் இருக்க:

இட்லி கெட்டு போகாமல் இருக்க

வெளியூர் செல்லும் போது இட்டலி எடுத்து செல்வோம். அப்போது கொஞ்ச நேரம் ஆகிவிட்டால் இட்லியின் ருசி வித்தியாசமாக இருக்கும். அதனால் சூடான இட்லி மீது லேசாக நல்லெண்ணெய் தடவி கொள்ளவும். இப்படி செய்வதினால் இட்லி கெட்டு போகாமல் இருக்கும்.

இனிப்பு வகைகள் கெட்டு போகாமல் இருக்க:

இனிப்பு வகைகள் கெட்டு போகாமல் இருக்க

 ஸ்வீட்ஸ் வைத்திருக்கும் டப்பாவில் அடிப்பகுதியில் எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சு தோலை வைத்தி அதன் மேலே ஸ்வீட்டை வைக்கவும். பிறகு அதன் மேலே ஒரு துணியில் உப்பு சிறிதளவு வைத்து முடிந்து கொள்ளவும். இதையும் ஸ்வீட் மேலே வைத்து டப்பாவை மூடி விட வேண்டும். இப்படி ஸ்வீட் கெட்டு போகாமல் இருக்கும்.  

மசாலா தோசை ருசி அதிகரிக்க:

மசாலா தோசை ருசி அதிகரிக்க

மசாலா தோசை ஊற்றும் போது அதில் தேங்காய் சட்னியை தேய்த்து விட்டு பிறகு மசாலாவை தேய்த்தால் மசாலா தோசை ருசியாக இருக்கும்.

இல்லத்தரசிகள் சமையல் அறையில் கஷ்டப்படாமல் சமைக்க இந்த 5 டிப்ஸ் தெரிந்தால் போதும்..!

சாதம் குழைவாக இருந்தால்:

சாதம் குழைவாக இருந்தால்

சாதம் குழைவாக இருந்தால் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து கெட்டி பதத்திற்கு வந்து விடும்.

பால் காய்ச்சும் முறை:

பால் காய்ச்சும் முறை

பால் காய்ச்சும் போது பால் திரிந்தால் அதில் ஆப்ப சோடா மாவை சேர்த்து கொள்ளவும். ஆப்ப சோடாவை சேர்த்து விட்டு கொதிக்க விட்ராதீர்கள்.

தோசை ருசியாக இருக்க:

தோசை ருசியாக இருக்க

தோசைக்கு உளுந்து மாவு அரைக்கும் போது அதில் பாதியளவு ளவில் மட்டும் வெண்டைக்காய் காம்புகளை சேர்த்து அரைத்தால் தோசை ருசியாக இருக்கும்.

சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இத பண்ணா போதும்

அலுமினியம் மற்றும் பீங்கான் பாத்திரத்தில் ஓட்டை விழுந்தால்:

அலுமினியம் மற்றும் பீங்கான் பாத்திரத்தில் ஓட்டை விழுந்தால்

அலுமினியம் மற்றும் பீங்கான் பாத்திரத்தில் ஓட்டை விழுந்தால் சுண்ணாம்பு மற்றும் வெல்லத்தை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும். இதை ஓட்டையில் வைத்து அடைக்கவும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்புகள் உங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தால் உங்களின் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். இது போல் வேறொரு பதிவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

SHARE