பூம்புகாரில் பார்க்கவேண்டிய சுற்றுலா தலங்கள்..!

Poompuhar Tourist Places in Tamil

பூம்புகார் சுற்றுலா தலங்கள் | Poompuhar Tourist Places in Tamil

பொதுவாக சுற்றுலா என்றாலே எல்லோருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் கடல் உள்ள இடங்கள் மிகவும் பிடிக்கும். அந்த வகையில் நீங்கள் இப்பதிவில் தெரிந்துகொள்ள போவது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரின் சுற்றுலா தளங்கள் பற்றித்தான். சோழ நாட்டை சேர்ந்த பூம்புகார், முற்கால சோழர்களின் தலைநகராக இருந்தது. சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்றான இந்நகரம் பூம்புகார், காவேரிப்பட்டினம், புகார் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. காவிரி ஆறு புகும் இடத்தில் இருந்த இந்த பட்டினம் காவிரிப்பூம்பட்டினம் என பெயர்பெற்றது. இத்தகைய சிறப்புகளை பெற்ற பூம்புகாரில் என்னென்ன சுற்றுலா தளங்கள் உள்ளது என்று பார்க்கலாம்.

பூம்புகார் கடற்கரை:

பூம்புகார் சுற்றுலா தலங்கள்

பூம்புகாரில் பார்க்கவேண்டிய முக்கியமான மற்றும் அழகான இடம் என்னெவென்றால் நம் எல்லோருக்கும் பிடித்த கடற்கரை தான். அழகான சூழலில் அமைந்துள்ள பூம்புகார் கடற்கரை பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் ஏற்றதாக இருக்கிறது. இருப்பினும்  இக்கடலில் அலைகள் அதிகமாக இருப்பதால் நீச்சல் போன்ற விளையாட்டுகளை தவிர்த்து கொள்ள வேண்டும். முற்காலத்தில் கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளிலிருந்து கப்பல்கள் வந்து நின்ற தொன்மையான துறைமுகமாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா தலங்கள் உள்ளதா..? இது தெரியாம போச்சு..!

 

சிலப்பதிகார கலைக்கூடம்:

பூம்புகார் கலைக்கூடம்

தமிழின் முக்கியமான பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை போற்றும் வகையில் சிலப்பதிகார கலைக்கூடம் நந்தவனம் போன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.

1973 ஆம் ஆண்டு தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த கலைக்கூடம் 7அடுக்குகளை கொண்ட கோபுர அமைப்புடன் கலைநயத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.

பூம்புகார் கலைக்கூடம்

காப்பிய நாயகன் கோவலனின் சிலையும், காப்பிய நாயகியான கண்ணகியின் சிலையும் கலைக்கூடத்தின் வாசலிலே அமைக்கப்பட்டுள்ளது. கலைக்கூடத்தின் கோபுரமானது 50 அடி உயரத்திலும், அதன் உச்சியில் உள்ள கலசம் 8 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில் இருபுறமும் கண்ணகி மற்றும் மாதவி சிலைகள் சிலம்பு வீற்றிருப்பதை போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு நீர்நிலை உள்ளது. சிலப்பதிகாரத்தின் பெருமையை உணர்த்தும் இந்த கலைக்கூடத்தை நிதானமாக ரசித்து பார்க்கலாம்.

சேலம் மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா ஸ்தலங்கள்..!

 

நகரவாயில்:

பழமையான இந்த நகரவாயில் பூம்புகாருக்கு அருகில் உள்ள தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. இந்த நகரவாயில் 1792 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்ட ஆரமித்து டச்சுக்காரர்களால் கட்டி முடிக்கப்பட்டது.

இது ஐரோப்பிய நாடுகளில் உள்ள நகரவாயில் போன்று கட்டப்பட்டிருப்பதால் சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்பி பார்க்கும் இடமாக திகழ்கிறது.

மாசிலாமணி நாதர் கோயில்:

பூம்புகார் சுற்றுலா தலங்கள்

பூம்புகாரை ஒட்டிய தரங்கம்பாடியில் அமைந்துள்ள இந்த மாசிலாமணி நாதர் திருக்கோயில் கடலை நோக்கியவாறு அமைந்துள்ளது. மாரவர்ம குலசேகர பாண்டியன் என்னும் பாண்டிய குல மன்னரால் 1305 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் உள்ள தமிழர்களின் கோவில் கலையின் அம்சத்தை உணர்த்தும் வகையில் காலத்தால் அழியாமல் நீடித்திருக்கிறது.

நீங்கள் திருக்கடையூர், தில்லையாடி வழியாக பூம்புகாருக்கு செல்லும் போதே இக்கோயிலை பார்க்கலாம்.

டேனிஷ் கவர்னர் பங்களா:

டேனிஷ் பங்களா எனப்படும் இது தரங்கம்பாடியில் அமைந்துள்ளது. மாசிலாமணி நாதர் கோயிலை பார்த்ததும் பயணிகள் இந்த பழமையான பங்களாவை சுற்றி பார்க்கலாம். இந்த வளாகம் தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த வளாகத்தில் ஒரு அருங்காட்சியமும் அமைக்கப்பட்டிருக்கிறது.

தேனி மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான சுற்றுலா தலங்கள் பற்றி தெரிந்துகொள்வோம் ..!

 

சியோன் தேவாலயம்:

poompuhar tourist places in tamil

இந்த தேவாலயம் 1701 ஆம் ஆண்டில் தரங்கம்பாடியில் வசித்த டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. பிறகு இந்த தேவாலயத்தை 1782 மற்றும் 1784 ஆம் ஆண்டிகளில் புதுப்பித்துள்ளனர். இந்த தேவாலயத்தின் பழமையை கருதி இது முக்கியயமான சுற்றுலாத்தலமாகவும் திகழ்கிறது.

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide