இந்தியன் வங்கியில் கிரெடிட் கார்டு வைத்து இருப்பவரா நீங்கள்..! அப்போ இதை தெரிந்துக்கொள்ளுங்கள்..!

indian bank credit card details in tamil

Indian Bank Credit Card Details  

சாதாரணமாக நாம் அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் என்றால் நிறைய பொருட்கள் இருக்கும். அப்படிப்பட்ட அத்தியாவசிய பொருட்களில் கிரெடிட் கார்டும் ஒன்று. இத்தகைய கிரெடிட் கார்டு ஆனது முந்தைய காலத்தில் எல்லாம் ஒன்று அல்லது இரண்டு நபர்களிடம் இருப்பதே ஆச்சரியமான ஒன்றாக இருந்ததது. ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இந்த தொழில்நுட்ப காலத்தினை பொறுத்தவரை கிரெடிட் கார்டு இல்லாமல் யாரும் இருப்பது இல்லை. அப்படி நாம் கிரெடிட் கார்டு வைத்து இருந்தால் மட்டும் போதாது அந்த கார்டில் உள்ள சில அடிப்படையான விஷயங்களை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். ஆகாயல் இன்று இந்தியன் வங்கி கிரெடிட் கார்டு பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.

Indian Credit Card Names:

  • VISA cards
  • Gold and Classic cards
  • Platinum cards
  • Bharat cards
  • Business Card

கிரெடிட் கார்டிற்கான தொகை என்பது ஒவ்வொரு கார்டிற்கு ஏற்றவாறும் மற்றும் உங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறும் அளிக்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டு இந்தியன் வங்கியில் 8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு தானா..? அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும் தெரியுமா..?

Indian Credit Card Details in Tamil:

இந்தியன் வங்கியில் கிரெடிட் கார்டு ஆனது ஒரு நபரின் மாதசம்பளம் மற்றும் தொழில் புரிவதற்கான வருடாந்திர சம்பளம் மற்றும் சிபில் மதிப்பெண் ஆகியற்றை அடிப்படையாக கொண்டு தான் வழங்கப்படுகிறது.

அதுபோல Indian பேங்கில் கிரேட் கார்டுக்கான மாதாந்திர வட்டியானது தோராயமாக 1.66% முதல் 1.99% வரை ஆகும். மேலும் இந்த வட்டியானது ஒவ்வொரு கார்டுக்கும் வேறுபாடும்.

நீங்கள் பெற்ற கிரெடிட் கார்டின் தொகையினை திரும்ப செலுத்துவதற்கான காலம் என்று பார்த்தால் தோராயமாக 45 நாட்கள் மாதம் முதல் 24 மாதங்கள் வரை ஆகும்.

மேலும் உங்களுடைய தொகையினை சரியான தேதியில் செலுத்த தவறினால் அதற்கான அபராதமும் விதிக்கப்படும். அதுபோல உங்களுக்கு வேண்டும் என்றால் இதனை EMI ஆகவும் மாற்றி கொள்ளலாம்.

Indian கிரெடிட் கார்டின் சிறப்பு அம்சங்கள்:

Indian வங்கியில் தோராயமாக 5 கிரெடிட் கார்டுகள் உள்ளன. Bharat cards, Gold and Classic cards, Platinum cards ஆகிய கார்டுகளுக்கு Joining Fees எதுவும் கிடையாது. ஆனால் மற்ற கார்டுகளுக்கு சேமிப்பு கட்டணம் என்பது நீங்கள் பெற்ற கார்டின் தொகையினை பொறுத்து மாறுபடும்.

அதுபோல மற்ற கார்டுகளுக்கு Joining Fees ஆனது வேறுபடுவது போல VISA கிரெடிட் கார்டுக்கு Annual Fees என்பது 500 ரூபாய் ஆகும். ஆனால் மற்ற கார்டுகளுக்கு Annual Fees இருக்காது.

இந்தியன் வழங்கக்கூடிய கார்டுகளை வைத்து அனைத்து விதமான ஆன்லைன் ஷாப்பிங்கும் செய்து கொள்ளலாம். பெட்ரோல் அல்லது டீசலுக்கு 2.5% மற்றும் ஆன்லைன் Movie டிக்கெடிற்கு 1.8% உங்களுக்கு போனஸ் பாயிண்ட்டாக Gold and Classic cards, Bharat cards மற்றும் Platinum cards ஆகிய கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

குறிப்பு: இத்தகைய சிறப்பு அம்சங்கள் அனைத்தும் ஒவ்வொரு கார்டு ஏற்றவாறும் மாறும்.

தொடர்புடைய பதிவுகள்
இந்தியன் வங்கியில் கிரெடிட் கார்டு பெறுவதற்கான தகுதிகள் இது தானா..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
கனரா வங்கியில் 5 லட்சம் வீட்டுக் கடன் பெற்றால் கட்ட வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI எவ்வளவு தெரியுமா…?
வீட்டு லோன் வாங்கிய மக்களுக்கு இப்படியொரு அதிர்ச்சியா..? இனி மாத EMI எவ்வளவு உயரும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking