ஏன் கோவிலுக்கு செல்லும்போது கோவில் வாசல் படியை தொட்டு கும்பிட்டு செல்கின்றனர் தெரியுமா..?

Advertisement

கோவிலுக்கு செல்லும் முறை

பொதுவாக கோவிலுக்கு செல்லுதல் என்பது நம் முன்னோர்களின் காலத்தில் இருந்து தோன்றிய ஒரு பழக்கம் ஆகும். அந்த பழக்கத்தை இன்று வரை நம் தமிழர்கள் தொடர்ந்து பின் தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் மனதில் மகிழ்ச்சி இல்லாமல் இருந்தால் கூட உடனே அனைவரும் வீட்டிற்கு அருகில் உள்ள ஏதோ ஒரு கோவிலுக்கு சென்று சற்று மன நிம்மதி அடைகின்றனர். ஆனால் அப்படி கோவிலுக்கு செல்வதிலும் சில முறைகளை பின்பற்றுகின்றனர். அது என்னவென்றால் கோவிலுக்கு வெளியே செருப்பை கிழட்டி விடுதல், அசைவம் சாப்பிட்டால் கோவிலுக்கு செல்லாமல் இருத்தல் மற்றும் முக்கியமான ஒன்று என்னவென்றால் கோவில் உள்ளே செல்வதற்கு முன்பு கோவில் வாசல் படியை தொட்டு வணங்குதல். இதில் ஒன்றை மற்றும் இன்றைய பதிவில் ஏன் கோவிலுக்கு செல்லும்போது கோவில் வாசல் படியை தொட்டு கும்பிட்டு செல்கின்றனர் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

கோவிலில் பெண்கள் ஏன் குருக்களாக இல்லை..? அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

Why Touch and Bow at The Gate of The Temple in Tamil:

கோவிலுக்கு செல்லும் முறை

கோவிலுக்கு செல்லும்போது நாம் அனைவரும் முதலில் செய்வது கோவில் வாசல் படியை தொட்டு வாங்குவது தான். யாராக இருந்தாலும் முதலில் இதை செய்த பிறகு தான் உள்ளே செல்கிறோம்.

இதுபோல கோவில் வாசல்படியை தொட்டு வணங்கி செல்வதற்கான காரணம் என்னவென்றால் நாம் கோவில் வாசல் படியை குணிந்து வணங்கும் போது நம்முடைய பணிவு அங்கு தெரியவருகிறது.

அதேபோல சிலர் நான் தான் எல்லாம் என்று கொஞ்சம் அகம்பாவத்துடன் இருப்பதாக மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அப்படி கிடையாது என்பதற்கு  உதாரணமாக அவருடைய பணிவு வெளிப்படுகிறது.

 நாம் கோவில் வாசல் படியை வாங்கும் போது இரண்டாவது ஒரு நன்மையும் நமக்கு நடக்கிறது. அது என்னவென்றால் நாம் குனியும் போது நமது உடலில் உள்ள சூரிய நாடியை நன்றாக செயல்பட செய்கிறது.  

இதையும் பாருங்கள் –> கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..?

நாம் எப்போதும் வாசல் படியினை தொட்டு வணங்கிய பிறகு நம்முடைய கைகளை நெற்றியில் வைத்து வணங்குவோம். அப்படி செய்யும் போது நம் புருவத்தில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது அழுத்தம் ஏற்பட்டு நம்மிடம் இருக்கின்றன தீய சக்தியினை வெளியற்றி நல்ல ஆற்றலை வரச்செய்கிறது. 

இதுமாதிரி நாம் செய்து விட்டு அதன் பிறகு கோவிலுக்கு செல்வதனால் கோவிலிருந்து வரும் அருள் நமது மீது பட்டு தெய்வத்தின் முழு அருளும் நமக்கு கிடைத்து நலமாக வாழலாம் என்று நம் முன்னோர்கள் உருவாக்கியதே இந்த நடைமுறை ஆகும்.

இதுவே நாம் கோவிலுக்கு செல்லும்போது நாம் வாசல்படியை தொட்டு வாங்குவதற்கான காரணம் ஆகும்.

இதையும் படியுங்கள்⇒ கோவிலுக்குள் செருப்பு போட கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Advertisement