Mokka Jokes
வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்கு செல்பவர்களாக இருந்தாலும் சரி மன அழுத்தம் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களை விட வேலைக்கு சென்று மாலை வீட்டிற்கு வந்தால் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சில நபர்கள் டிவி பார்ப்பார்கள். இன்னும் சில நபர்கள் மொபைல் பார்ப்பார்கள். மனதில் உள்ள கஷ்டத்தை மறந்து சிரிக்க வேண்டும் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். சரி வாங்க பதிவை படித்து சிரிக்கலாம்.
Mokka jokes:
- நம்ம தமிழ்நாட்டுல எந்த ஆத்துக்குள்ள மீன் பிடிக்க முடியாது?
விடை: ஐயர் ஆத்துல தான்.
2. சென்னை கடற்கரையிலே வீடு கட்டுனா என்ன ஆகும்.?
விடை: ஒன்னு ஆகாது காசு தான் செலவு ஆகும்.
3. உங்க பேனாவை வெச்சி எல்லா எழுத்தையும் எழுதலாம் ஆனா ஒரு எழுத்தை எழுத முடியாது?
விடை: தலையெழுத்து
4. ஒருத்தன் எப்ப பார்த்தாலும் கதவை மூடிட்டு தான் மருந்து குடிக்கிறாரு ஏன்?
விடை: ஏன்னா டாக்டர் தான் அறை மூடி மாத்திரை குடிக்க சொன்னாராம்.
5. இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்?
விடை: ஏன்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு
6. எதோ பண்டிகைன்னா ஏன் வாழைமரம் கட்டுறாங்கனு தெரியுமா?
விடை: ஏன்னா வாழைமரம் கட்டலைன்னா அது கீழே விழுந்துடும்ல அதனால தான் கட்டுறாங்க.
7. கடிகாரம் வாங்க ஒருத்தன் கடைக்கு போன அப்போ அந்த கடைக்காரரு கிட்ட எந்த கடிகாரம் சரியா Time காட்டும்னு கேட்டானாம். அதுக்கு அந்த கடைக்காரரு என்ன சொல்லி இருப்பாரு தெரியுமா?
விடை: எந்த கடிகாரமும் நேரத்தை காட்டாது நம்ம தான் பார்த்துக்கணும்.
8. சக்கரை டப்பால உப்புனு எழுதி ஒட்டியிருந்தாங்களாம் ஏன்?
விடை: ஏன்னா எறும்பு ஏமாத்தறதுக்கு.
9. ரொம்ப நாள் உயிரோட இருக்கணும்னா என்ன பண்ணனும்?
விடை: சாகாமல் இருக்கணும்
10. ஒரு பக்கெட் நிறைய தண்ணீர் இருந்துச்சாம் அதுல ஒரு கல் போட்ட என்ன ஆகும்.?
விடை: கல்லு நனஞ்சு போயிடும்.
மேலும் கடி ஜோக்ஸ் பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | கடி ஜோக்ஸ் |