ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் திருக்குறள் விளக்கம் | Eendra Pozhuthin Thirukkural
Eendra Pozhuthin Thirukkural:- திருக்குறள் புகழ் பெற்ற தமிழ் மொழி இலக்கணம் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த திருக்குறளினை உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உதிரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களிலும் அழைக்கின்றன. இத்திருக்குறளை திருவள்ளுரவர், கி.மு நூற்றாண்டுக்கும் ஒன்றாம் நூற்றாண்டிற்கும் இடையில் வாழ்ந்தவராக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றன.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் திருக்குறள் பொருள்:
- குறள் எண் – 69
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – மக்கட்பேறு
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
மு. வரதராசன் உரை:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.
சாலமன் பாப்பையா உரை:
தம் மகனைக் கல்வி ஒழுக்கங்களால் நிறைந்தவன் என்று அறிவுடையோர் கூற அதைக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதைக் காட்டிலும் மிகுதியாக மகிழ்வாள்.
கலைஞர் உரை:
நல்ல மகனைப் பெற்றெடுத்தவள் என்று ஊரார் பாராட்டும் பொழுது அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சியை அந்தத் தாய் அடைவாள்.
நீரின்றி அமையாது உலகு திருக்குறள் பொருள் |
அன்பும் அறனும் திருக்குறள் |
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் திருக்குறள் பொருள் |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |