மாதம் 1,000 செலுத்தினால் போதும்..! 1 வருடத்தில் 1,000,00 வரை பென்ஷன் தரும் ஓய்வூதிய திட்டம்..!

LIC Saral Pension Plan in Tamil

LIC Saral Pension Plan 

வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நாம் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். பொதுவாக நாம் அனைவருமே கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.

ஆனால் அதனால் நமக்கு எந்தவொரு பயனும் இல்லை. காரணம் நாம் பணத்தை சேமித்து வைத்தால் நாளடைவில் நாம் சேமித்து வைத்த பணம் மட்டுமே இருக்கும். அதுவே பணத்தை முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் நமக்கு கிடைக்கும். அதனால் தான் இன்று பலரும் போஸ்ட் ஆபிஸ், LIC போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று LIC யில் இருக்கும் ஒரு அருமையான ஓய்வூதிய திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

400 நாட்களில் Rs.3,25,938 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டம்

LIC Saral Pension Plan in Tamil:

LIC Saral Pension Plan

நீங்கள் ஒரு வருடாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் சேர விரும்பினால் இந்த சாரல் பென்ஷன் திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் தனிநபருக்கான சாரல் பென்சன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த திட்டத்தை ஒற்றை பிரீமியம் திட்டம் என்றும் சொல்லலாம். இந்த சாரல் திட்டத்தின் கீழ் நீங்கள் வருடாந்திரம் அல்லது உயிருடன் இருக்கும் வரை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டுக்கு தவணை செலுத்தும் வசதியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

பாலிசிதாரர் இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ1,000 மாத ஓய்வூதியம் அல்லது ரூ 2,000 வருடாந்திர ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டத்தில் ஒருவர் ஒருமுறையில் ஒரே பிரீமியமாக ரூ 2.50 லட்சம் செலுத்த வேண்டும்.

செல்வமகள் மற்றும் PPF திட்டத்தில் சேமிப்பு வைத்திருப்பவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள் இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டும்

வயது தகுதி: 

இந்த சாரல் பென்ஷன் திட்டத்தில் 40 முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் இந்த வருடாந்திர ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதியுடைவர்கள் ஆவர்.

கடன் வசதி:

இந்த சாரல் பென்ஷன் திட்டத்தை தொடங்கி 6 மாதங்கள் முடிந்த பிறகு இந்த திட்டத்தின் கீழ் கடன் வசதி வழங்கப்படும். மேலும் இதில் 6 மாதங்களுக்கு பிறகு இந்த சாரல் ஓய்வூதியத் திட்டத்திலிருந்து வெளியேறிக் கொள்ளலாம்.

மரணப்பலன்: 

இந்த எல்ஐசியின் சாரல் பென்ஷன் திட்டத்தை பெற்றவர் இறந்து விட்டால், பயனாளரின் அடிப்படை பிரீமியம் நாமினிக்கு திரும்ப வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் முதிர்வுப் பலன் இல்லை.

மத்திய அரசின் அசத்தலான திட்டம்..! 7 வருடத்தில் Rs.15,14,500/- பெறலாம்

 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil