போஸ்ட் ஆபிஸ் பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு..! பயன்படுத்தாமல் இருந்தால் இனி பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!

New Interest Rates on Post Office Schemes 2023

New Interest Rates on Post Office Schemes 2023

போஸ்ட் ஆபீஸ் பயனர்களுக்கு இந்த பதிவை படிக்க ஆர்வமாக இருப்பீர்கள். போஸ்ட் ஆபிஸ் பயனர்கள் இல்லை என்றால் இனி அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் அருமையான மாற்றத்தை கொடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன். இந்த வருடம் அவர் அறிவித்த பட்ஜெட் எதில் மாற்றமோ இல்லையோ போஸ்ட் ஆபிஸ்க்கு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. அப்படி என்ன என்பது தான் இப்போது கேள்வியாக இருக்கும்.

New Interest Rates on Post Office Schemes 2023:

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைத்த மத்திய பட்ஜெட் 2023, இந்தியாவில் இரண்டு பிரபலமான அஞ்சல் அலுவலக முதலீட்டுத் திட்டங்களில் பெரிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதிலும் முக்கியமாக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம். இதில் அதிக வரி இல்லாத முதலீடுகளை அனுமதிக்கும் வகையில் இந்த இரண்டு திட்டங்களின் சேமிப்பு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆண்களுக்கு 1000 ரூபாய் முதலீட்டில் போஸ்ட் ஆபீஸ் அருமையான 3 சேமிப்பு திட்டம்..!

 போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் மாத சேமிப்பு வைத்திருப்பவர்கள் வருட சேமிப்பு திட்டத்தில் ஒற்றை கணக்கு வைத்திருப்பவர்களுக்கான சேமிப்பு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது புதிய டெபாசிட் வரம்பு 4.5 லட்சத்திலிருந்து 9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 9 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  

மாதம் மாதம் சேமிக்கும் கணக்கை திறக்க தேவையான குறைந்தபட்ச தொகை 1,000 ஆகவே இருக்கும். இந்த சேமிப்பு தொகையின் வட்டியை மாதம் மாதம் எடுத்துக் கொள்ள முடியும். அல்லது வருட கடைசியில் எடுத்துக்கொள்ள முடியும். முக்கியமாக அந்த தொகைக்கு கூடுதல் வட்டி கிடையாது. முதிர்வு காலத்திற்கு இடையில் உங்களின் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.

2023 பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய அரசு கொடுத்த ஒரு ஹாப்பி நியூஸ் 

ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன் பணத்தை எடுத்தால் அந்த பணத்திலிருந்து 2% விலக்கு அளிக்கப்படுகிறது. மற்றும் 3 ஆண்டுகளுக்கு பிறகு பணத்தை எடுக்க நினைத்தால் கணக்கை திறந்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன் உள்ள பணத்திலிருந்து 1% விலக்கு அளிக்கப்படுகிறது.

 அதேபோல் மூத்த குடிமக்கள் திட்டத்தில் அதிக முதலீடு அளிக்கும் வகையில் சேமிப்பு தொகை 15 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை உயர்த்தியுள்ளது.  

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு 299 செலுத்தினால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்..!

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil