மாதம் மாதம் Rs.40,000/- தரும் மத்திய அரசு திட்டம் அனைவரும் சேரலாம்..!

Advertisement

மாதம் மாதம் Rs.40,000/- தரும் மத்திய அரசு திட்டம் அனைவரும் சேரலாம்..! NPS Scheme Full Details in Tamil 2023..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்று நாம் மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய திட்டத்தை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இது ஒரு பென்ஷன் திட்டம் ஆகும். இவற்றில் நீங்கள் முதலீடு ஒவ்வொரு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களுடைய 60 வயது வரை டெபாசிட் செய்து வர வேண்டும். உங்களது 60 வயதிற்கு பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி இரண்டு சேர்த்து நீங்கள் 60% Withdraw செய்து கொள்ளலாம். மீதமுள்ள 40% டெபாசிட் தொகையை இந்த திட்டம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வார்கள். அவற்றில் இருந்து கிடைக்கும் வட்டியை உங்களுக்கு மாதம் மாதம் உங்கள் வாழ்நாள் முழுவதும் பென்ஷனாக வழங்குவார்கள். உங்களது வாழ்நாள் முடிந்த பிறகு உங்களது நாமினிக்கு அந்த 40% சதவீதம் தொகையை மொத்தமாக வழங்குவார்கள். சரி இந்த திட்டம் குறித்த மேலும் விவரங்கள் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

தகுதி:

  • 18 வயது பூர்த்தியான இந்தியர்கள் அனைவருமே இந்த திட்டத்தில் சேரலாம். அதிகபட்ச வயது 70 ஆண்டுகள் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு 299 செலுத்தினால் உங்களுக்கு 10 லட்சம் கிடைக்கும்..!

எப்படி இந்த திட்டத்தில் சேரலாம்?NPS Scheme Full Details in Tamil 2023

அஞ்சல் அலுவலகம் மற்றும் தேசிகமாக்கப்பட்ட வங்கிகள் போன்றவற்றில் நீங்கள் இந்த தேசிய ஓய்வூதியம் திட்டத்தில் இணையமுடியும்.

ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் இந்த திட்டத்தில் இணையலாம், அதற்கு உங்களிடம் பான் கார்டு, ஆதார் கார்டு, E-mail ID மற்றும் உங்களது தொலைபேசி எண் போன்றவற்றை பயன்படுத்தி நீங்கள் இந்த திட்டத்திற்கு ஆன்லைன் மூலமாக சேரலாம்.

நீங்கள் திட்டத்தில் இணைத்த பிறகு உங்களுக்கு 12 இலக்குகளை கொண்ட ஒரு PRAN வழங்கப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி நீங்கள் இந்த திட்டம் குறித்த அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ளலாம். இதன் கூடவே உங்களுக்கு PRAN கார்டும் வழங்குவார்கள். அவை Tier-I, Tier-II என்று வழங்கபடுகிறது.

Tier-I என்பது இந்த NPS ஸ்கீமில் சேரும் அனைவருக்கும் கட்டாயம் வழங்கப்படும் அக்கௌன்ட் ஆகும். இந்த Tier-I Account-யில் நீங்கள் 60 வயதிற்கு பிறகு தான் டெபாசிட் செய்த தொகையை பெற முடியும்.

Tier-II Account என்பது உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஓபன் செய்துகொள்ளலாம். இந்த Tier-II Account-யில் நீங்கள் டெபாசிட் செய்த பணத்தை எப்பொழுது வேண்டுமானாலும் Withdraw  செய்துகொள்ள முடியும்.

ஒரு நபர் ஒரே ஒரு NPS Account-ஐ மட்டும் தான் ஓபன் செய்ய முடியும். ஒன்றுக்கும் பெறப்பட்ட Account-ஐ ஓபன் செய்ய முடியாது.

டெபாசிட் தொகை:

Tier-I Account-ற்கு குறைந்தபட்ச டெபாசிட் தொகை 500 ரூபாய். அதிகபட்ச டெபாசிட் தொகைக்கு எந்த ஒரு வரம்பும் இல்லை.

Tier-II Account-ற்கு குறைந்தபட்ச டெபாசிட் தொகை 1000 ரூபாய். அதிகபட்ச  டெபாசிட் தொகைக்கு எந்த ஒரு வரம்பும் இல்லை.

இந்த திட்டத்தின் கட்டணம் தொகை:

இந்த ஸ்கீமை நீங்கள் ஆன்லைன் மூலமாக ஓபன் செய்தால் எந்த ஒரு கட்டணம் தொகையும் இல்லை.

அதுவே வங்கி அல்லது அஞ்சல் அலுவலகத்தில் ஓபன் செய்தால் அதற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு 50 ரூபாய், Annual Maintenance Charges Rs.190/-, நீங்கள் அக்கௌன்ட் ஓபன் செய்த பிறகு உங்கள் ஸ்கீமில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டியதாக இருந்தால் அதற்கு 4 ரூபாய் வசூலிக்கப்படும்.

மெச்சூரிட்டி காலம்:

இந்த ஸ்கீமின் மெச்சூரிட்டி காலம் 60 வயதாகும். ஆக நீங்கள் 60 வயது வரை டெபாசிட் செய்து வர வேண்டும். உங்களது 60 வயதிற்கு பிறகு நீங்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி இரண்டு சேர்த்து நீங்கள் 60% Withdraw செய்து கொள்ளலாம். மீதமுள்ள 40% டெபாசிட் தொகையை இந்த திட்டம் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வார்கள். அவற்றில் இருந்து கிடைக்கும் வட்டியை உங்களுக்கு மாதம் மாதம் உங்கள் வாழ்நாள் முழுவதும் பென்ஷனாக வழங்குவார்கள். உங்களது வாழ்நாள் முடிந்த பிறகு உங்களது நாமினிக்கு அந்த 40% சதவீதம் தொகையை மொத்தமாக வழங்குவார்கள்.

உங்களது 60 வயதில் நீங்கள் டெபாசிட் செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி இவை இரண்டுயும் சேர்த்து 5 லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் நீங்கள் எந்த விதமான பென்ஷன் பண்டை வாங்க தேவையில்லை. அந்த தொகையை நீங்கள் முழுமையாக Withdraw செய்து கொள்ளலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபிஸில் தினமும் Rs.100 சேமித்தால் Rs.15,00,000/- பெறலாம்

உதாரணம்: 1

ஒரு நபர் தனது 20 வயதில் மாதம் மாதம் 1000 ரூபாயை இந்த NPS திட்டத்தில் தனது 60 வயது வரை டெபாசிட் செய்து வந்தால். அவர்கள் மொத்தம் 4,80,000/- ரூபாய் டெபாசிட் செய்திருப்பார்கள். அதற்கான வட்டி 37,72,250/- ரூபாய் வழங்குவார்கள். ஆக உங்களது 60 வயதில் Retirement Amount 42,52,250/- உங்கள் Account-யில் இருக்கும்.

இந்த Retirement Amount-யில் 60% தொகையை நீங்கள் Withdraw செய்துகொள்ளலாம் 60% என்றால் உங்களுக்கு 25,51,350/- ரூபாய் வழங்கப்படும்.

மீதமுள்ள 40% தொகையான 17,00,900/- ரூபாயை Pension Fund-யில் முதலீடு அதில் இருந்து கிடைக்கும் வட்டியை உங்களுக்கு மாதம் மாதம் பென்ஷனாக ரூபாய் 12,756/- வழங்கப்படும்.

உங்கள் வாழ்நாள் முடிந்த பிறகு உங்கள் நாமினிக்கு 17,00,900/- ரூபாயை வழங்கிவிடுவார்கள்.

உதாரணம்: 2

ஒரு நபர் தனது 28 வயதில் மாதம் மாதம் 5000 ரூபாயை இந்த NPS திட்டத்தில் தனது 60 வயது வரை டெபாசிட் செய்து வந்தால். அவர்கள் மொத்தம் 21,00,000/- ரூபாய் டெபாசிட் செய்திருப்பார்கள். அதற்கான வட்டி 1,14,73,599/- ரூபாய் வழங்குவார்கள். ஆக உங்களது 60 வயதில் Retirement Amount 1,35,73,599/- உங்கள் Account-யில் இருக்கும்.

இந்த Retirement Amount-யில் 60% தொகையை நீங்கள் Withdraw செய்துகொள்ளலாம் 60% என்றால் உங்களுக்கு 81,44,159/- ரூபாய் வழங்கப்படும்.

மீதமுள்ள 40% தொகையான 54,29,439/- ரூபாயை Pension Fund-யில் முதலீடு அதில் இருந்து கிடைக்கும் வட்டியை உங்களுக்கு மாதம் மாதம் பென்ஷனாக ரூபாய் 40,720/- வழங்கப்படும்.

உங்கள் வாழ்நாள் முடிந்த பிறகு உங்கள் நாமினிக்கு 54,29,439/- ரூபாயை வழங்கிவிடுவார்கள்.

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement