ஒரு வருடத்திற்கு Rs.299/- செலுத்தினால் Rs.10,00,000/- கிடைக்கும்

ஒரு வருடத்திற்கு Rs.299/- செலுத்தினால் Rs.10,00,000/- கிடைக்கும் | Post Office IPPB TATA AIG Group Insurance Scheme Tamil

இந்தியா போஸ்ட் ஆபிசில் உள்ள India Post Payment Bank ஒரு வருடத்திற்கு வெறும் 299/- ரூபாய்க்கு 10 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டை மக்களுக்கு வழங்குகிறார்கள். ஆக இந்த இன்சூரன்ஸ் குறித்த தகவல்களை பற்றி தான் இந்த பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க பதிவை முழுமையாக படித்து பயன்பெறலாம்.

India Post Payment Bank-ஆனது TATA AIG Group-வுடன் இணைத்து Accident Guard Policy என்ற இன்சூரன்ஸ் திட்டத்தை இரண்டு விதமாக வழங்குகிறார்கள் ஒன்று 399 ரூபாய் திட்டம் மற்றொன்று 299 ரூபாய் திட்டம். இவற்றை நாம் 299/- திட்டத்தை பற்றி.

இது ஒரு விபத்து காப்பீட்டு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில்  இணையலாம் என்றால் 18 வயது பூர்த்தியான இந்தியர்கள் இந்த திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் இணைய அதிகபட்ச வயது 65 வயது ஆகும்.

எப்படி இணையலாம்?India Post Payment Bank

இந்தியாவில் உள்ள எல்லா கிளைகளிலும் உள்ள India Post Payment Bank-யில் இணையலாம் அல்லது GTS மூலமாக இந்த காப்பீட்டு திட்டத்தில் இணையலாம்.

இந்த பாலிசியின் ஒரு வருடத்துக்கான பிரீமியம் அமௌன்ட் 299/- ரூபாய் ஆகும். ஆக நீங்கள் ஒவ்வொரு வருடமும் இந்த காப்பீட்டு திட்டத்தில் வெறும் 299 ரூபாய் செலுத்தினால் போதும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
போஸ்ட் ஆபீஸில் 5 வருடத்தில் வட்டி மட்டுமே 1,79,647 ரூபாய் பெறக்கூடிய இந்த சேமிப்பு திட்டம் பற்றி தெரியுமா..?

விபத்து காப்பீட்டு – Post Office 299 Insurance Scheme Tamil 2023:

இந்த திட்டத்தின் மூலம் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு செய்யப்படுகிறது.

விபத்தினால் உங்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தால் அதற்கு 60,000/- ரூபாய் வழங்கப்படும்.

அதேபோல் விபத்தினால் உங்களுக்கு காயம் ஏற்பட்டு அதற்கு நீங்கள் மருத்துவனையில் இருந்து சிகிச்சை பெறாமல் வீட்டில் இருந்தபடியே தினமும் அல்லது வாரத்தில் ஒரு முறை மட்டும் மருத்துவனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தால் அதற்கு 30,000/- ரூபாய் காப்பீடு வழங்கப்படும்.

விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். எனவே பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் மற்றும் தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
1 லட்சம் ரூபாய் செலுத்தினால் 1,43,578 ரூபாய் பெறக்கூடிய திட்டம் எந்த பேங்கில் உள்ளது தெரியுமா..? 

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil