Post Office PPF Account Rules
பொதுவாக நாம் அனைவருக்குமே பணக்கஷ்டம் என்பது இருக்கும். இருந்தாலும் நாம் அனைவரும் சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நாம் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்தால் நாளடைவில் நாம் சேமித்த பணம் மட்டுமே இருக்கும். அதுவே ஏதாவது ஒரு திட்டத்தில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் பல மடங்கு லாபத்தை அள்ளித்தரும்.
அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக போஸ்ட் ஆபிஸில் இருக்கும் சேமிப்பு திட்டங்கள் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று PPF சேமிப்பு திட்டத்தில் மார்ச் 31 ஆம் தேதிக்குள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
மாதம் 1,000 செலுத்தினால் போதும் 1 வருடத்தில் 1,000,00 வரை பென்ஷன் தரும் ஓய்வூதிய திட்டம் |
Post Office PPF Account Rules in Tamil:
போஸ்ட் ஆபிஸில் இருக்கும் சிறந்த சேமிப்பு திட்டங்களில் இதுவும் ஒன்று. போஸ்ட் ஆபிஸில் அதிகமாக லாபம் தரக்கூடிய சேமிப்பு திட்டத்தில் சேர விரும்பினால் PPF சேமிப்பு திட்டம் அதாவது Public Provident Fund சேமிப்பு திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
இந்த PPF சேமிப்பு திட்டம் தமிழில் பொது வருங்கால வைப்பு நிதி என்று அழைக்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தின் கால அளவு 15 வருடமாகும். மேலும் இந்த சேமிப்பு திட்டத்தில் நீங்கள் எவ்வளவு பணம் டெபாசிட் செய்கிறீர்களோ, அந்த பணத்தை வட்டியுடன் 15 வருடம் கழித்து மொத்தமாக பெற்று கொள்ளலாம்.
செல்வமகள் மற்றும் PPF திட்டத்தில் சேமிப்பு வைத்திருப்பவர்கள் மார்ச் 31-ம் தேதிக்குள் இதை செய்துவிடுங்கள் இல்லையென்றால் அபராதம் கட்ட வேண்டும் |
இந்த திட்டதிற்கு வட்டி விகிதமாக 7.1 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 500 ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். மேலும் அதிகபட்ச தொகையாக ஒரு நிதியாண்டில் 1,50,000 வரை டெபாசிட் செய்ய வேண்டும்.
அதுவே நீங்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்ச தொகையான 500 ரூபாய் கூட டெபாசிட் செய்யவில்லை என்றால் உங்கள் PPF சேமிப்பு கணக்கு Inactivate அதாவது லாக் செய்யப்படும். அதை நீங்கள் மீண்டும் Activate செய்ய வேண்டும். அதற்காக நீங்கள் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் இதற்கு அபராதமாக 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.அதுபோல இந்த சேமிப்பு திட்டத்தில் நீங்கள் எந்தவொரு பணமும் டெபாசிட் செய்யவில்லை என்றால் அந்த 15 வருடமும் உங்கள் சேமிக்கு கணக்கு Inactivate இல் தான் இருக்கும். அதனால் இந்த வருடம் அதாவது 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் PPF சேமிப்பு திட்டத்தில் 500 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்கள் சேமிப்பு கணக்கு லாக் செய்யப்படுவதை தடுக்க முடியும்.
400 நாட்களில் Rs.3,25,938 ரூபாய்க்கு மேல் லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டம் |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |