போஸ்ட் ஆபிஸ் டைம் டெபாசிட் சேமிப்பு திட்டம் விவரம்..! Post Office Time Deposit Scheme in Tamil..!
வணக்கம் நண்பர்களே இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் அஞ்சல் அலுவலகத்தில் உள்ள Time Deposit-யின் விவரங்கள் மற்றும் இதற்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். ஆக விவரங்களை முழுமையாக தெரிந்துகொள்ள பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
யாரெல்லாம் எந்த திட்டத்தில் இணையலாம்? முழு விவரம் இதோ..
18 வயது பூர்த்தி செய்த எந்தவொரு இந்திய குடிமகனும் இந்த டைம் டெபாசிட் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும் இதனை இதனை ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் 3 பேர் வரை இணைந்து தொடங்கலாம். குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம். ஒருவர் எத்தனை கணக்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம்.
டெபாசிட் செய்யும் முறை:
இந்த டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் ஒரு பெரிய தொகையை லம்சமாக ஒரு முறை மட்டும் டெப்பாசிட் செய்தால் போதும். பிறகு முதிர்வு காலம் முடித்தபிறகு நீங்கள் முதலீடு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டி ஆகிய இரண்டியும் சேர்த்து பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெறும் 501 நாளில் Rs.1,11,858/- வட்டி தரக்கூடிய அருமையான சேமிப்பு திட்டம்..!
டெபாசிட் தொகை:
டைம் டெபாசிட் திட்டத்திற்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை 1000 ரூபாய் ஆகும். அதிகபட்சமாக நீங்கள் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
டெபாசிட் காலம்:
இந்த திட்டத்தில் முதிர்வு காலம் என்பது நான்கு வகைகளாக கொடுக்கின்றன அதாவது அவை ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம் மற்றும் ஐந்து வரும் என்று நான்கு வகைகளாக கொடுக்கின்றன அவற்றில் உங்களுக்கு எந்த ஆப்சன் பிடித்துள்ளதோ அதனை தேர்வு செய்து முதலீடு செய்யலாம்.
வட்டி:
இந்த திட்டத்தில் நான்கு வகையான டெபாசிட் காலம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதால் அதற்கான வட்டி விகிதமும் மாறுபடும்.
மேலும் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி விகிதமானது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் இந்த டைம் டெபாசிட் திட்டத்திற்கு ஏப்ரல் 1, 2023 முதல் ஜூன் 30, 2023 அன்றுக்குள் இணைந்தால் அவர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் வட்டி விகிதம் இதோ..
- ஒரு வருடத்திற்கு டெபாசிட் செய்தால் 6.8% வட்டி வழங்கபடுகிறது.
- இரண்டு வருடத்திற்கு டெபாசிட் செய்தால் 6.9% வட்டி வழங்கபடுகிறது.
- மூன்று வருடத்திற்கு டெபாசிட் செய்தால் 7.0% வட்டி வழங்கப்படுகிறது.
- ஐந்து வருடத்திற்கு டெபாசிட் செய்தால் 7.5% வட்டி வழங்கபடுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
50 ரூபாய் முதலீடு செய்தால்..! 10 லட்சம் வரை லாபம் கிடைக்கும்..!
சரி இந்த டைப் டெபாசிட் இரண்டு வருடம் டெபாசிட் செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று இப்பொழுது பார்க்கலாம் வாங்க..
டெபாசிட் தொகை | வட்டி | மொத்த தொகை |
10,000 | 6.9% | 1,418 |
50,000 | 7,054 | |
1,00,000 | 14,108 | |
2,00,000 | 28,213 | |
5,00,000 | 70,544 | |
10,00,000 | 1,41,082 |
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |