Pradhan Mantri Vaya Vandana Yojana
தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள திட்டங்களை பற்றி தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை படிக்க தொடங்குங்கள் பயனடையலாம். நாம் இன்று ‘பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா’ திட்டத்தை பற்றிய தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவை முழுதாக படியுங்கள்.
LIC-ல் 200 ரூபாய் செலுத்தி 28 லட்சம் வரை பெறக்கூடிய அருமையான திட்டம்..! |
Pradhan Mantri Vaya Vandana Yojana in Tamil:
ஆயுள் காப்பீடு நிறுவனமான LIC பிரதான் வய வந்தனா யோஜனா என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக பிரத்யேகமாக இந்திய அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும்.
இந்த திட்டமானது ஆண்டுக்கு 7.40% உறுதியான வருவாய் விகிதத்தை வழங்குகிறது. இத்திட்டம் மாதந்தோறும் செலுத்தக்கூடிய 7.40% உத்தரவாத ஓய்வூதியத்தை வழங்குகிறது. இது அரசு மானியம் வழங்கும் ஒரு திட்டமாகும். அதிகபட்ச ஓய்வூதியம் மாதம் 9,250 வழங்கப்படுகிறது.
இதையும் படித்துப்பாருங்கள் => எதிர்காலத்தில் பல நன்மைகளை அளிக்கும் அருமையான LIC திட்டம்..!
திட்டத்தை பெற தகுதி நிபந்தனைகள்:
இந்த திட்டத்தை பெற குறைந்தபட்சம் 60 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இதில் அதிகபட்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. இந்த திட்டத்தில் ஒரு மூத்த குடிமகனுக்கு ரூ. 15 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி வாய வந்தன யோஜனா திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 10 ஆண்டுகள் வரை அவர்கள் ஓய்வூதியம் பெற முடியும். வயதானவர்களுக்கு இந்த திட்டம் பயனுள்ள திட்டமாக இருக்கும்.
இதையும் படித்துப்பாருங்கள்–> அசத்தலான ஆயுள் காப்பீடு..! முதிர்வு காலத்தில் லம்ப் அமௌன்ட் கிடைக்கும்..!
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தின் நன்மைகள்:
- மூத்த குடிமக்களுக்கான மற்ற ஓய்வூதிய திட்டங்களின் வட்டி விகிதம் குறைந்தாலும் இந்தத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் வட்டி விகிதம் நிரந்தரமானதாக இருக்கும்.
- 10 வருட பாலிசி காலத்தின் இறுதி வரை ஓய்வூதியம் பெறுபவர் உயிருடன் இருந்தால் இறுதி ஓய்வூதியத் தவணையுடன் கொள்முதல் விலையும் செலுத்தப்பட வேண்டும்.
- அதாவது ஒருவேலை ஓய்வூதியதார்கள் 10 ஆண்டுகள் வரை பணம் பெற்று முடிக்கும் போது பாலிசி வாங்கிய விலை மற்றும் ஓய்வூதிய தவனைத் தொகை மொத்தமாக பயனாளிக்கு வழங்கப்படும்.
- ஓய்வுதியதார்களுக்கு NEFT பரிவர்த்தனை இணையதள வங்கி சேவை அல்லது ஆதார் பணப் பரிவர்த்தனை மூலமாக ஓய்வூதிய பணம் வழங்கப்படும்.
- பாலிசி காலத்தில் ஓய்வூதியதாரர் இறக்க நேர்ந்தால், அவர் வாங்கிய தொகை அவருடைய பயனாளிக்கு திரும்ப அளிக்கப்படும்.
- பாலிசி 3 ஆண்டுகள் முடிந்த பிறகு கடன் வசதி கிடைக்கும். வழங்கக்கூடிய அதிகபட்ச கடன் கொள்முதல் விலையில் 75% ஆக வழங்கப்படும்.
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |