பெண்குழந்தை வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு.. அதிக வட்டி தரும் அரசு சேமிப்பு திட்டம்..! Sukanya Samriddhi Yojana Scheme Details in Tamil
Sukanya Samriddhi Yojana Scheme Details in Tamil – உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா? அந்த குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுறீங்களா? இனி அவ்வாறு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பெண்குழந்தைக்கான சேமிப்பு திட்டங்கள் நிறைய உள்ளது. அவற்றில் ஒன்று தான் சுகன்யா சம்ரிதி திட்டம். இந்த திட்டம் குறித்த விவரங்களை இந்த பதிவில் படித்தறியலாம். அதாவது இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெறலாம், எவ்வளவு முதலீடு செய்யலாம், இந்த திட்டத்திற்கான முதிர்வு காலம் என்ன, எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும், எப்படி இந்த திட்டத்தில் இணைவது போன்ற தகவல்களை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.
தகுதி:
இந்த திட்டத்தில் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் தபால் நிலையங்கள்களில், வங்கிகளில் தங்களது கணக்கை ஓபன் செய்யலாம்.
முதலீட்டு தொகை:
வருடத்திற்கு நீங்கள் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும். இந்த திட்டத்தில் சேமிக்கப்படும் தொகைக்கான வட்டி அவ்வப்போது மத்திய பட்ஜெட்டில் மாற்றி அறிவிக்கப்படும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
என்ன சொல்லுறீங்க ..? போஸ்ட் ஆபீஸில் குழந்தைகளுக்கு இப்படி ஒரு அருமையான ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளதா..?
சுகன்யா சம்ரிதி திட்டம்:
இந்த திட்டத்தில் எந்த பெண்ணின் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டதோ அந்த பெண் உயர் கல்வி பயிலும் போது குறிப்பிட்ட தொகையை வெளியே எடுத்துக்கொள்ள முடியும்.
மேலும் பெண்ணிற்கு 18 வயது பூர்த்தியான பிறகு, அந்த பெண்ணினி திருமணத்திற்கு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.
21 ஆண்டுகள் கழித்து கணக்கு முடியும் பொழுது சேமிப்பில் உள்ள தொகை வட்டியுடன் வழங்கப்படும்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
ஒரு நபர் தன் பெண் குழந்தையின் 3-வது வயதில் இருந்து வருடத்திற்கு 50 ஆயிரம் விகிதம் இந்த திட்டத்தில் சேமிக்கிறார் என்று வைத்து கொள்வோம்.
15 ஆண்டுகளில் அவர் செலுத்திய தொகை 7,50,000/- ரூபாயாக இருக்கும். இந்த திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டியின் விகிதமானது ஆண்டிற்கு 7.6%-மாக உள்ளது. ஆழ 21 ஆண்டுகளில் அவர் பெரும் வட்டியானது ரூபாய் 13,17,718 ரூபாய் சேர்த்து முதிர்வு தொகையாக 21,21,718 ருபையாக அவர்களுக்கு வழங்கப்படும்.
இருப்பினும் நீங்கள் இடை இடையில் உயர் கல்வி, திருமணத்திற்கு என்று பணம் எடுக்கப்பட்டால் அவர்களுக்கான முதிர்வு தொகையானது மாறுபடும்.
இது தவிர நீங்கள் PPF என்பதும் பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு சான்றிதழ், மியூட்சுவல் ஃபண்டுகள், வங்கி டெபாசிட்டுகள் போன்றவற்றிலும் பெண் குழந்தைகளுக்காக சேமிக்கலாம். மேலும் உங்கள் பெண் குழந்தையின் வயதிற்கு ஏற்ப, தங்கத்தில் முதலீடு செய்யலாம், தங்க பத்திரம், கோல்ட் ஈடிஎஃப் போன்றவற்றிலும் முதலீடு செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Post ஆபீஸில் Single பிரீமியம் செய்தால் போதும் 2 வருடத்தில் 2,32,044 ரூபாய் பெறலாம்..!
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |