குழந்தைகள் தினம் பற்றிய கட்டுரை 2023 | Kulanthaigal Dhinam Katturai in Tamil
Childrens Day Speech in Tamil: குழந்தைகளின் எதிர்காலத்தினை நல்ல திசையில் மாற்றி அமைப்பது நம் அனைவரின் கடமையாகும். குழந்தைகள் அனைவரும் நேருவை நேரு மாமா என்று செல்லமாக அழைப்பார்கள். இந்திய அரசானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14-ஆம் தேதியினை ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக அறிவித்தது. குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகள் தினம் அன்று எல்லோரும் ஒற்றுமையுடன் சேர்ந்து அந்த நாளினை கொண்டாடி மகிழ்வார்கள். இதுமட்டுமல்லாமல் குழந்தைகள் தினத்திற்காக ஆசிரியை பெருமக்கள் பேச்சு போட்டி நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்காக விளையாட்டு போட்டிகள், அவர்களுக்கு பிடித்த பொருள்களை வாங்கி பரிசாக வழங்குவார்கள். இத்தகைய சிறப்புமிக்க குழந்தைகள் தின விழா கட்டுரை பற்றி ஒரு சிறப்பு தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.
குழந்தைகள் தின வாழ்த்துக்கள் இமேஜஸ் டவுன்லோடு செய்ய>> | Childrens Day Wishes in Tamil |
குழந்தைகள் தினம் பற்றி:
நேரு தன் குழந்தைகளை தாண்டி அனைத்து குழந்தைகளின் மீதும் அளவற்ற பாசத்தினை காட்டியவர் என்பதால் அவருடைய பிறந்த தினத்தினை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை நாம் அனைவரும் கொண்டாடுவதற்கு முக்கிய நோக்கம் சிறந்த கல்வி, சிறந்த வாழ்வாதாரம் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமையாக கிடைக்க செய்வதே ஆகும். அந்த நாளில் குழந்தைகளுக்கு பேச்சு போட்டி , பாட்டு போட்டி, நடன போட்டி, சிறு பட்டி மன்றங்கள் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
நேருவின் கூற்று: தேசத்தின் சொத்தானது களஞ்சியத்தில் இல்லை கல்வி பயிலும் பள்ளியிலையே இருக்கிறது என்றார்.
குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்:
இந்தியாவில் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதற்குக் காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான். சட்டென இலகும் மனம் கொண்டவர்களை குழந்தை குணம் உள்ளவர் என்று அனைவரும் சொல்லுவோம். மனதில் கள்ளம் கபடமற்ற இந்த குழந்தைகளுக்காக உலகம் முழுவதும் சர்வதேச குழந்தைகள் தினம் நவம்பர் 20-ம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேரு முதன் முதலில் பிரதமராக இருந்த போது நாட்டில் உள்ள குழந்தைகள், இளைஞர்களின் உடல்நிலை, அவர்களுடைய படிப்பு, வாழ்க்கையின் முன்னேற்ற தரம் பற்றி பல திட்டங்களை நிறைவேற்றி கொடுத்தவர். மேலும் வாழ்க்கையின் பொழுதுபோக்கிற்காக குழந்தைகளுடன் பேசி மகிழ்வார்.
இதையுக் கிளிக் செய்து படியுங்கள் 👇
குழந்தைகள் தினம் பேச்சு போட்டியில் ஜெயிக்க எளிமையான பேச்சு போட்டி கட்டுரை..!
குழந்தைகள் தின பேச்சு போட்டி எளிய 10 வரிகள்..!
நேரு மாமா பாடல் வரிகள்
குழந்தைகளின் மனம் கவர்ந்தவர்:
உலகிலேயே குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக கொண்டுள்ள நாடு பெருமைக்குரிய இந்திய நாடுதான். நேருவின் அத்தனை புகைப்படங்களிலும் மிக சிறப்பு பெற்றவை குழந்தை செல்வங்களோடு அவர் இருக்கும் புகைப்படம்தான். ஜவகர்லால் நேரு, அரசியல் துறையில் தேர்ச்சியும், எத்தனை அனுபவம் பெற்றிருந்தாலும், உள்ளத்தால் குழந்தை மனதுடனேயே இருந்ததால் குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.
குழந்தைகள் தின விழாவின் நோக்கம்:
நவம்பர் 14 அன்று உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வந்தாலும் ஒரு புறம் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. நாட்டில் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்துக் குழந்தைகளுக்குமே அடிப்படை கல்வியும், அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம்.
பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம்:
ஜெனீவாவில் 1925-ம் ஆண்டு நடைபெற்ற குழந்தைகள் நல்வாழ்வு தொடர்பான சர்வதேச மாநாட்டில் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் அவர்களுக்கான கல்வி உறுதி குறித்து அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டு இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
குழந்தைகளை குழந்தைகளாய் மட்டுமே மற்றவர்கள் பார்த்தல் வேண்டும்:
ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளை பெற்ற தாய்மார்களும் தங்களிடம் இருக்கும் குறைகளை நீக்கி, குழந்தைகளுடைய ஆசைகளையும், அவர்களிடம் இருக்கும் ஆர்வத்தையும், மனநிலை எப்படி உள்ளது, அணுகுமுறைகளையும் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கான பாடத்தைப் போதிக்க வேண்டும். இவ்வாறான அணுகுமுறையே குழந்தைகளின் நாளைய ஆக்கப்பூர்வமான சாதனைகளுக்கு வித்தாக அமையும் என மனதில் கொள்ளுங்கள்.
🥰குழந்தைகள் தின நன்னாளினை உங்கள் அருமை மழலை செல்வங்களோடு இனிமையாக கொண்டாடி மகிழ பொதுநலம்.காம் பதிவின் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்💐💐
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |