உங்கள் வீட்டில் பொருட்கள் வீணாகாமல் இருக்க இதை தெரிந்துக்கொண்டால் போதும்..!

home tips in tamil

Home Tips in Tamil

வணக்கம் நண்பர்களே..! நம்முடைய வீட்டில் வாங்கி வைக்கும் பொருட்கள் வீணாக போகக்கூடாது என்று அனைவரும் நினைப்பார்கள். ஆனால் அப்படி இருந்தும் கூட எப்படியாவது அந்த பொருட்கள் சில நேரத்தில் வீணாகிவிடும். அதனால் நீங்கள் கவலை பட வேண்டாம். அந்த மாதிரி பொருட்கள் வீணாகாமல் இருப்பதற்கான டிப்ஸினை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொண்டு பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ இல்லத்தரசிகள் சமையல் அறையில் கஷ்டப்படாமல்                                  சமைக்க இந்த 5 டிப்ஸ் தெரிந்தால் போதும்..!

வீட்டில் உள்ள பொருட்கள் வீணாகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

டிப்ஸ்- 1

நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் காய்ந்த மிளகாய், உப்பு ஜாடி, புளி ஜாடி இது மாதிரி பொருட்கள் இருக்கும் பாத்திரத்தில் பூச்சிகள் உள்ளே சென்று விடும். நீங்கள் சமையலுக்கு திறந்து பார்க்கும் போது பூச்சி வெளியே வரும். அதனால் அந்த பொருட்கள் வீணாகி விடும்.

இந்த மாதிரி பொருட்கள் வீணாகாமல் இருப்பதற்கு 4 அல்லது 5 கிராம்புகளை பூச்சி வரும் பாத்திரத்தில் போட்டு மூடி விடுங்கள். இது மாதிரி நீங்கள் செய்தால் பொருட்கள் வீணாகாது. பூச்சிகள் வருவதையும் தடுக்கலாம்.

டிப்ஸ்- 2

நீங்கள் சாப்பாட்டிற்கு பயன்படுத்தி விட்டு மீதி அப்பளத்தை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்து விடுவீர்கள். மறுமுறை அந்த அப்பளத்தை சமையலுக்கு பயன்படுத்தும் போது அப்பளம் ஈரமாகி நமத்து போகிவிடும்.

அப்பளம் நமத்து போகாமல் இருக்க 1 ஸ்பூன் வெந்தயத்தை அப்பளம் இருக்கும் டப்பாவில் போட்டு மூடி விடுங்கள். இது மாதிரி செய்தால் அப்பளம் எப்போதும் போல பிரஷாக இருக்கும்.

இந்த டிப்ஸ் தெரிஞ்சா நீங்கள் தான் சமையல் ராணி 

டிப்ஸ்- 3

அனைவருடைய வீட்டிலும் பூட்டு கட்டாயமாக இருக்கும். அந்த பூட்டு காலப்போக்கில் துருப்பிடித்து பழுது அடைந்து விடும். அது மாதிரி பூட்டு துருப்பிடித்து விட்டால் பூட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும்.

அது மாதிரி துருப்பிடித்து போகிருந்தால் தேங்காய் எண்ணெயை அடுப்பில் வைத்து காய்ச்சி துருப்பிடித்த இடத்தில் எண்ணெயை ஊற்றினால் பூட்டு பூட்டுவதற்கு ஈஸியாக இருக்கும்.

டிப்ஸ்- 4

நமக்கு எதாவது காயம் ஏற்பட்டாலோ அல்லது ஊசி போட்டு இருந்தாலோ ஐஸ் பேக் வைக்க சொல்வார்கள். ஆனால் எல்லோருடைய வீட்டிலும் ஐஸ் பேக் இருக்கும் என்று சொல்ல முடியாது. அதனால் அந்த ஐஸ் பேக்கை நீங்கள் வீட்டிலேயே தயார் செய்யலாம்.

அதற்கு நீங்கள் முதலில் ஒரு பாலீத்தின் கவரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பாலீத்தின் கவர் கடைகளில் சர்க்கரை விற்கும் கவரை போல இருக்க வேண்டும். அதாவது ஒரு பக்கம் மட்டும் இடைவெளி இருக்கும் மற்ற பக்கங்கள் அடைந்து இருக்கும்.

அது மாதிரி உள்ள ஒரு கவரை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றி அந்த ஒரு பக்கத்தை மூடி விடுங்கள். அதன் பிறகு அந்த கவரை பிரிஜில் வைத்து விடுங்கள். 1 மணி நேரம் களித்து பாருங்கள் ஐஸ் பேக் தயாராக இருக்கும்.

20 சிறந்த சமையல் அறை டிப்ஸ்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil