TV Screen துடைக்கும் போது இதுபோன்ற தவறுகளை செய்கிறீர்களா..? இனி இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

Advertisement

TV துடைக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்..? 

வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப் போகிறோம். நாம் எப்பொழுதும் நம்முடைய வீட்டை துடைத்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். வீடு எப்பொழுதும் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும்.

வீட்டை அழகுபடுத்துவதில் பெண்களே அதிகம் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நாம் எப்பொழுதுமே நம்முடைய வீட்டில் உள்ள பொருட்களை வாரம் ஒரு முறை அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை துடைத்து சுத்தம் செய்வோம். அதுபோல துடைத்து சுத்தம் செய்யும் பொருட்களில் ஓன்று தான் TV.

என்ன தான் இன்றைய காலத்தில் மொபைல் போன்கள் இருந்தாலும் டிவி பார்க்கும் பழக்கம் குறைவதே இல்லை. அதுபோல நீங்கள் TV துடைக்கும் போது உங்களை அறியாமலே சில தவறுகளை செய்கிறீர்கள். அப்படி செய்வதால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பதிவை படித்து அந்த தவறுகளை திருத்தி கொள்ளுங்கள்…

தினமும் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை வைத்து இவ்வளவு விஷயம் செய்யலாமா?

TV துடைக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன..? 

TV துடைக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்

நாம் அனைவருமே தூசி மற்றும் அழுக்கு இல்லாத இடங்கள் மற்றும் பொருட்களையே அதிகம் விரும்புவோம். எப்பொழுதும் வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவோம்.

அதுபோல நாம் பயன்படுத்தும் பொருட்களில் அதிகம் தூசி படிவது டிவியில் தான். அதனால் TV -யை அடிக்கடி சுத்தம் செய்வது என்பது அவசியமாகிறது. ஆனால் அதிக பேர் டீவியை சுத்தம் செய்யும் போது சில தவறுகளை செய்கிறார்கள்.

பொதுவாக அனைவருமே TV துடைக்கும் போது ஈர துணியை பயன்படுத்துவார்கள். அப்படி செய்வதால் TV -ல் உள்ள தூசிகள் அதிலே படிந்து விடுகின்றன.

இதையும் பாருங்கள் —> வெள்ளி நகைகளை புதுசாக மாற்ற சிறந்த டிப்ஸ் இதோ..!

டிப்ஸ்:1

நீங்கள் உங்கள் TV -யை துடைக்கும் போது ஈர துணிகள் மற்றும் துண்டுகள் வைத்து துடைப்பதால் டிவி திரையில் சில சேதங்களை ஏற்படுத்துகிறது. அதுபோல நீங்கள் துடைக்கும் போது அழுத்தம் கொடுப்பதால் டிவி திரை விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளது.

அதனால் டீவியை துடைக்கும் போது மிருதுவான துணிகளை பயன்படுத்துங்கள். மைக்ரோஃபைபர் போன்ற துணிகளை பயன்படுத்தி டிவி திரை மற்றும் கண்ணாடிகள் போன்றவற்றை துடைப்பதால் அவை நல்ல பளபளப்பாக இருக்கும். இந்த மைக்ரோஃபைபர் துணியானது கண்ணாடி திரையில் கோடுகள் ஏற்படுவதை தவிர்க்க உதவுகிறது.

டிப்ஸ்:2

சிலர் டிவி துடைக்கும் போது சில வகையான திரவங்களை பயன்படுத்துவார்கள். அப்படி செய்வதை தவிர்க்க வேண்டும். அதுபோல திரவ கரைசல்களை நேரடியாகவும் திரையில் பயன்படுத்த கூடாது. இப்படி செய்வதால் திரையில் சில சேதங்கள் ஏற்படுகிறது. அதனால் திரவங்கள் அதிகமாகவும் நேரடியாகவும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

டிப்ஸ்:3

அதுபோல டிவி ஓடிக்கொண்டிருக்கும் போதே டீவியை சுத்தம் செய்ய கூடாது. நீங்கள் டிவி துடைக்கும் போது உங்கள் டிவி அணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது மின் அபாயங்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. அதுபோல டீவியை துடைத்த பின்னர் ஈரப்பதம் காய்வதற்குள் டீவி ஆன் செய்வதை தவிர்க்க வேண்டும். திரை முழுமையாக காய்ந்த பின் டிவி பார்ப்பது நல்லது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement