shoes cleaning at home in tami
வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவு எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது நாம் அதிகமாக உபயோகிக்கும் காலணிகளை எப்படி சுத்தம் செய்வது என்று தான் பார்க்கப் போகின்றோம். பொதுவாக வீட்டில் இருக்கும் பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை காலணிகளை அதிகமாகவே பயன்படுத்துவோம் அல்லவா.
நாம் வெளியிடங்களுக்கு சென்று வீட்டிற்கு வருவதிற்குள் நாம் அணிந்திருக்கும் காலணிகள் அழுக்காக மாறிவிடும், அதிலும் முக்கியமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் Shoes மிகவும் மோசமாக இருக்கும். இதனை நாம் தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து காய வைத்து படாதபாடு படுவோம். இனிமேல் இதற்கான அவசியம் இருக்காது. மேலும் அந்த டிப்ஸ் என்னவென்று தெரிந்துகொள்வோம் வாங்க.
5 நிமிடம் போதும் அழுக்கு படிந்த வெள்ளை Shoe-ஐ புத்தம் புதிதாக மாற்றிடலாம்..! |
Shoes Cleaning Tips in Tamil:
டிப்ஸ்:1
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா-2 ஸ்பூன்
- வினிகர்- 2 ஸ்பூன் அளவு
- தண்ணீர்- 1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் பேக்கிங் சோடா, வினிகர், தண்ணீர் போன்றவற்றை நன்றாக கலந்துகொள்ள வேண்டும், அதன் பிறகு ஒரு உங்களுடைய அழுக்கான காலணிகளை எடுத்து கலந்து வைத்த கலவையில் ஸ்கிரப்பரை நனைத்து காலணிகளை நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பிறகு சிறிது தண்ணீர் தொட்டு அந்த காலணியை தூய்மைப்படுத்த வேண்டும்.
டிப்ஸ்:2
தேவையான பொருட்கள்:
- பல் துலக்கும் பேஸ்ட்
- துணிப்பவுடர்
செய்முறை:
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் நீங்கள் பல் துவக்கும் பேஸ்ட்டையும், துணி பவுடரையும் எடுத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களிடம் தேவையில்லாத பல் துலக்கும் பிரஸ் இருந்தால் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு பல் துலக்கும் பிரஸில் பேஸ்ட்டை வைத்து, நீங்கள் உபயோகிக்கும் துணி பவுடரில் தொட்டு, அழுக்காக இருக்கும் காலணிகளை தேய்க்க வேண்டும், பின்பு ஒரு காட்டன் துணியை எடுத்து துடைத்தால் உங்களுடைய காலணிகள் தூய்மையாகிவிடும்.
டிப்ஸ்:3
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா
- ஷாம்பு
செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் பேக்கிங் சோடா, ஷாம்பு போன்றவற்றை நன்றாக கலக்க வேண்டும். அடுத்ததாக அழுக்காக இருக்கும் காலணிகளை எடுத்து , கலந்து வைத்த கலவையில் டூத் பிரஸ் கொண்டு நனைத்து அதை அந்த காலணிகளை தேய்க்க வேண்டும். அதில் உள்ள அழுக்குகள் கரைந்த பிறகு, ஒரு ஈரமான துணியை கொண்டு அதில் துடைக்க வேண்டும்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒரு குறிப்பை பயன்படுத்தினால் போதுமானது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கை வைக்காமலேயே பழைய வெள்ளை துணியை புதியது போல மாற்றுவதற்கும் வாசனையாக வைப்பதற்கும் இந்த ஒரு டிப்ஸ் போதும்..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |