ராணிப்பேட்டை மாவட்டத்தில் இவ்ளோ அழகான இடங்கள் இருக்கிறதா..! இது தெரியாம போச்சே..!

Ranipet District Tourist Places in Tamil

பொதுவாக நம்மில் பலருக்கும் சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் எங்கு செல்வது என்ற குழப்பம் இருக்கும். அப்படி உங்கள் மனதிலும் அப்படி ஒரு குழப்பம் உள்ளதா..? பரவாயில்லை இன்றைய பதிவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மிகவும் அழகான மற்றும் சுவாரசியமான சுற்றுலா ஸ்தலங்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.

அதனால் இந்த பதிவை முழுதாக படித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அழகான இடங்களுக்கெல்லாம் உங்களின் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் சென்று மகிழுங்கள்.

இதையும் படியுங்கள்=> திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிக அருமையான 10 சுற்றுலா ஸ்தலங்கள் உங்களுக்கு தெரியுமா..!

Ranipet District Tourist Places in Tamil:

ராணிப்பேட்டை மாவட்டம் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை என்றால் ராணியின் இடம் என்று பொருள்.

சர்வதேச அளவில் தோல் பொருட்களின் ஏற்றுமதியில் ஒரு சிறந்த இடமாக இந்த ராணிப்பேட்டை மாவட்டம் விளங்குகிறது. இப்படி பல சிறப்புகளை தனக்குள் கொண்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா ஸ்தலங்களை பற்றி பார்க்கலாம்.

1. காஞ்சனகிரி மலை: 

Arcot tourist places in tamil

நாம் முதலாவதாக பார்க்க இருக்கும் இடம் காஞ்சனகிரி மலை தான். 1500 ஆடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலை ராணிப்பேட்டை மாவட்ட மக்களின் மனம் கவர்ந்த இடமாக உள்ளது.

மிகவும் இயற்கை எழிலுடன் காணப்படும் இந்த மலையில் தட்டினால் மணிஓசை கேட்கக்கூடிய பாறை ஒன்று உள்ளது. இந்த மலை ராணிப்பேட்டையில் இருந்து 9 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 

அதனால் அடுத்த முறை நீங்கள் ராணிப்பேட்டை சென்றீர்கள் என்றால் இந்த காஞ்சனகிரி மலைக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=> கோவை மாவட்டத்தில் உள்ள மிகவும் அருமையான 12 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

2. கயிலை நீர்வீழ்ச்சி: 

Arcot hill station in tamil

அடுத்து நாம் பார்க்க இருக்கும் இடம் கயிலை நீர்வீழ்ச்சி தான். இந்த கயிலை நீர்வீழ்ச்சியில் மழைக்காலங்களில் மட்டும்தான் தண்ணீர் இருக்கும். இந்த நீர்வீழ்ச்சி ராணிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ள வேலம் என்னும் ஊரின் அருகில் உள்ள அம்மூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்த நீர்விழ்ச்சிக்கு சென்றீர்கள் என்றால் நன்கு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். அதனால் அடுத்த முறை நீங்கள் ராணிப்பேட்டை சென்றீர்கள் என்றால் இந்த கயிலை நீர்வீழ்ச்சிக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.

3. ரத்தனகிரி முருகன் கோவில்:

Hill station near ranipet in tamil

அடுத்து நாம் பார்க்க இருக்கும் இடம் ரத்தனகிரி முருகன் கோவில் தான். இந்த கோவில் ராணிப்பேட்டையில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள ரத்தனகிரி என்னும் மலையில் அமைந்துள்ளது.

இந்த கோவில் 14-நூற்றாண்டில் அருணகிரி நாதரால் கட்டப்பட்டு 1980-ல் பாலமுருகன் அடிமை சுவாமி என்பவரால் புனரமைக்கப்பட்டது. இந்த கோவில் மலையின் மேல் அமைந்துள்ளதால் இந்த கோவிலுக்கு செல்லும் பொழுது பல இயற்கை காட்சிகளை காணமுடியும்.

அதனால் அடுத்த முறை நீங்கள் ராணிப்பேட்டை சென்றீர்கள் என்றால் இந்த ரத்தனகிரி முருகன் கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=>உலகின் மிகவும் அழகான 5 ஊர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

4. மகேந்திரவாடி குடைவரை கோவில்:

Tourist places in ranipet in tamil

நாம் பார்க்க இருக்கும் இடம் மகேந்திரவாடி குடைவரை கோவில் தான். இந்த கோவில் ஒரு பெரிய பாறையை குடைந்து அமைக்கபட்டுள்ளது. இந்த கோவில் கி.பி 600 காலகட்டத்தில் ஆட்சி புரிந்த மகேந்தரவர்ம பல்லவனால் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பழமைவாய்ந்த குடைவரை கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவில் ராணிப்பேட்டையில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள மகேந்திரவாடி என்னும் இடத்தில் அமைந்துள்ளது. 

அடுத்த முறை நீங்கள் ராணிப்பேட்டை சென்றீர்கள் என்றால் இந்த மகேந்திரவாடி குடைவரை கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.

5. பஞ்சபாண்டவர்கள் மலை சமண கோவில்:

Arcot waterfalls in tamil

அடுத்து நாம் பார்க்க இருக்கும் இடம் பஞ்சபாண்டவர்கள் மலை சமண கோவில் தான். இந்த கோவிலும் தமிழகத்தின் பழமைவாய்ந்த குடைவரை கோவில்களில் ஒன்று.

இந்த கோவிலும் மன்னன் மகேந்தரவர்ம பல்லவனால் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் ஆற்காட்டில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள விளாப்பாக்கம் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. 

அடுத்த முறை நீங்கள் ராணிப்பேட்டை சென்றீர்கள் என்றால் இந்த பஞ்சபாண்டவர்கள் மலை சமண கோவிலுக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=>தர்மபுரி மாவட்டத்தில் இவ்வளவு அழகான சுற்றுலா ஸ்தலங்கள் உள்ளதா..! 

6. காவேரிப்பாக்கம் ஏரி: 

Arcot near tourist places in tamil

நாம் இறுதியாக பார்க்க இருக்கும் இடம் காவேரிப்பாக்கம் ஏரி தான். இந்த ஏரி ராணிப்பேட்டையில் இருந்து 23 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஏரியை சுற்றி பல இயற்கை காட்சிகள் இருக்கிறது.

அதனால் அடுத்த முறை நீங்கள் ராணிப்பேட்டை சென்றீர்கள் என்றால் இந்த காவேரிப்பாக்கம் ஏரிக்கு கண்டிப்பாக சென்று வாருங்கள்.

இதையும் படியுங்கள்=> கிருஷ்ணகிரி மாவட்டத்தில் Top 5 சுற்றுலா ஸ்தலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இது போன்ற பயனுள்ள தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Travel Guide