அறிவியல் வளர்ச்சி கட்டுரை | Ariviyal Valarchi Katturai in Tamil

Advertisement

அறிவியல் வளர்ச்சி பொது கட்டுரை

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு “நவீன கோவில்கள்” என அழைக்கப்படும் ஆராய்ச்சிக் கூடங்கள், தொழில் நுட்ப நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மிகவும் அவசியமான ஒன்று. ஆகவே அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவில் அறிவியல் வளர்ச்சி கட்டுரை பற்றி பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பயன்பெறுங்கள்.

ஒரு நாட்டிற்கு அறிவியல் வளர்ச்சி என்பது மிகவும் முக்கியம். நம் நாடு எந்த அளவிற்கு அறிவியல் வளர்ச்சியை எட்டியுள்ளது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் அறிவியல் வளர்ச்சி பற்றி இப்பதிவில் பின்வருமாறு கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

அறிவியல் வளர்ச்சி கட்டுரை:

முன்னுரை:

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைகளில் தொலைபேசி இன்றி யாரையுமே பார்க்க முடிவதில்லை. கையில் ஒரு சிறிய தொலைபேசி மற்றும் கணினியை வைத்துக் கொண்டு இந்த உலகையே கைக்குள் அடக்கி வைத்துக்கொள்கின்றன. அதாவது இதனை கொண்டு உலகின் எந்தப் பகுதியிலும் நிகழும் நிகழ்வையும் அறிந்து கொள்வதோடு பணபரிமாற்றம், இணைய வழிகல்வி மற்றும் உணவைக் கூட கட்டளை அனுப்புவதன் மூலம் வீட்டிற்கே வரவழைத்துக் கொள்கின்றனர். இதற்கெல்லாம் ஆணிவேராய் அமைவது அறிவியல் தான். இவ்வுலகில் அறிவியல் இல்லையேல் மனிதவாழ்க்கையே இல்லை என கருதுமளவிற்கு அறிவியலானது மனித வாழ்க்கையோடு ஒன்றி காணப்படுகின்றது.

தோற்றம்:

மனிதாக பிறந்தவன் எப்போது தனது வாழ்க்கையை இலகுபடுத்தும் ஒவ்வொரு விஷயத்தையும் கண்டுபிடிக்கத் ஆரம்பித்தானோ அன்றே அறிவியலானது தோற்றம் பெற்று விட்டது. நமது அறிவியல் தோற்றத்தை சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும். நவீன அறிவியல் பதினேழாம் நூற்றாண்டு அளவிலேயே தோற்றம் பெற்றது. பலவகையான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ முறைகள், மற்றும் கட்டட கலை வடிவங்கள் போன்றன இன்றைக்கு பல நூற்றாண்டுகளிற்கு முன்னரே தோற்றம் பெற்றுவிட்டன.

ஆதி மனிதன் இரு கற்களை உரசுவதன் மூலம் தீப்பொறி உருவாகுவதை கண்டுபிடித்தான். இது போன்று மனிதன் கண்டுபிடித்ததில் இருந்து சக்கரங்கள், உலோகங்கள் என மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அறிவியல் என்பது நம்மால் அறிந்து அளவிட மற்றும் முடிவுகளை எட்டக்கூடியவற்றை பற்றி மட்டுமே பேசுகின்றது. மேலும் மனிதமூளைக்கு எட்டாதவைகளை பற்றியும், ஏனைய கணிக்க முடியாதவற்றையும் பற்றி அறிவியல் பேசும்.

எரிபொருள் சிக்கனம் கட்டுரை

அறிவியல் வளர்ச்சி:

ஆதிகாலத்தில் இருந்தே இந்த உலகம் கடவுளால் இந்த உலகம் படைக்கப்பட்டதாகவும், பூமியில் நடைபெறுகின்ற அனைத்துமே கடவுளின் செயல்களே என்ற மனித மூடநம்பிக்கையை மறுத்து இயற்கை மற்றும் ஏனைய பொருட்களின் தோற்றத்திலுள்ள அறிவியலை இந்த உலகிற்கு எடுத்துரைத்தவர்கள் அறிவியலாளர்களே. அவர்களுள் ஆர்க்கிமிடிஸ், சாக்கிரட்டீஸ், அலெக்சாண்டர் தி கிரேட் மற்றும் கலிலியோ ஆகியோர் முக்கியமானவர்களாவார். இவர்களாலே இன்று அறிவியலானது மிக உன்னதமான இடத்தை அடைந்துள்ளது. இவர்களது கண்டுபிடிப்புக்களே இன்றைய நவீன விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளிற்கு பின்பற்றுகின்றன.

மின் காந்தவியல், அணுவியக்கவியல் மற்றும் இயற்கையில் தோற்ற விதிகளைப் பயன்படுத்தி இன்று அறிவியலானது கற்பனைக்கு அப்பாற்பட்ட உச்சத்தை எட்டியுள்ளது. விண்கலங்களை உருவாக்கியதன் மூலம் பூமியில் வாழ்கின்ற மனிதன் இப்பூமியை விட்டு அண்டவெளிக்குள் பிரவேசித்து ஏனைய கோள்களைப் பற்றி ஆய்வில் ஈடுபட்டு வருகின்றான். அறிவியலின் பிரமாண்ட வளர்ச்சியானது மனிதனை பூமியை கடந்து ஏனைய கோள்களில் குடியேற வழி அமைத்துள்ளது. காலம் காலமாக படிப்படியாக அறிவியலில் ஏற்றபட்ட மாற்றங்கள் இன்று மனித வாழ்க்கையை இலகுவாக மாற்றியுள்ளன.

அன்றாட வாழ்வில் அறிவியல்:

எமது அன்றாட வாழ்வில் நாம் அறிந்தோ அறியாமலோ அறிவியலால் உருவாக்கப்பட்ட பல சாதனங்களை பயன்படுத்தி வருகின்றோம். அவை நமது செயற்பாடுகளை குறைப்பதோடு, நேரத்தையும் மிச்சப் படுத்துகின்றன. குறிப்பாக மின்சாரம் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நாம் நினைத்து பார்க்க முடியாது. அந்த மின்சாரத்தை இந்த உலகிற்கு அளித்தது அறிவியலே. மின் விளக்குகள், வானொலி மற்றும் ஏனைய பொழுதுபோக்கு சாதனங்கள், குளிர்சாதனப்பெட்டி உட்பட அனைத்து சமையல் உபகரணங்கள் என அனைத்துமே அறிவியல் கலந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன.

மனிதர்கள் ஒவ்வொருவரினதும் அத்தியாவசிய தேவையாக விளங்குவது போக்குவரத்து. போக்குவரத்து சாதனங்களான பேருந்து, மிதிவண்டி, புகையிரதம் மற்றும் விமானம் போன்றன அறிவியலின் தோன்றல்களே. பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் நுணுக்குக்காட்டி, பரிசோதனை உபகரணங்கள் போன்ற அனைத்துமே அறிவியலை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டன. இவ்வாறு அறிவியல் மனித வாழ்க்கையோடு இணைந்து முக்கியத்துவம் பெற்றதாக விளங்குகின்றது.

முடிவுரை:

தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்ட இந்த உலகமானது அறிவியலையே ஆதாரமாகக் கொண்டுள்ளது. வணிக மற்றும் வர்த்தக நடவடிக்கைகள், வானியல் ஆய்வுகள், தொலைதொடர்பு என இவையனைத்துமே அறிவியியல் இல்லையேல் நன்றாக இருக்காது. ஆனால் தற்கால அறிவியலானது நன்மைகளை மட்டுமின்றி தீமைகளையும் உருவாக்குகின்றது. உலகை பாதிக்கின்ற அணு ஆயுதங்களை உருவாக்குதல், சூழலை பாதிக்கின்ற இயந்திரங்களை உருவாக்குதல் போன்றனவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். மனித வாழ்க்கையோடு இணைத்து அறிவியலை நல்ல விடயங்களிற்கு மட்டும் பயன்படுத்தி சிறப்பாக வாழ்வோமாக.

தூய்மை இந்தியாவின் மாணவர்களின் பங்கு

 

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement